திங்கள், 27 பிப்ரவரி, 2017

கட்டமைத்த  பிம்பம்
உடையாதிருக்கவும்
உடைந்த சில்லுகள்
ஓட்ட வைப்பதிலுமே
நாம்  வாழாதிருக்கிறோம்!?


வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

சரி எனப்படுவது

எது சரி?
நீளுகிற விவாதங்களில் 
வெற்றி பெற்றவர்களாக 
பிரகனப் படுத்திக் கொள்வதில் 
ஏக பெருமுயற்சி!


புது வித கோணங்களில் 
அணுகுவதாய் 
சொல்லிக் கொள்வதற்குப் பின்பும் 
விளம்பரமே 
பிரதானம்


மட்டம் தட்டுதல்,
ஒரு சேர குரலுயர்த்தல்,
கூட்டத்தோடு ஒத்து ஓதுதல்...
வெவ்வேறு விதமான 
அணுகு முறைகளில் 
எதோ ஒன்றைப் பிடித்து தான் 
நானும் கடந்து போகிறேன் -
அப்போதைக்கு 
சரியெனப் படுகிற 
தளங்களில்!


பிற்பாடான 
சுய தேடலில் தான் 
சமயங்களில் 
விழி பிதுங்க
நகர்கிறேன்!!

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

விளம்பரங்கள்
வான வேடிக்கை மாதிரி
அற்புதம் தான் -
ஆளாளுக்கு கொளுத்திப்போட்ட
நெடியில்
மூச்சு முட்டுகிற வரை!

காது கிழிய
நீட்டி முழக்குகிற
விளம்பர வாசிகளே
என்ன தான்
விற்க முற்படுகிறீர்கள்
என்பது
புரிபட தொடங்கி விட்டது!

வேறு சந்தை
பாருங்களேன்!!

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

It was very colorful starting. Kids had lot of fun. Engaged good at various activities. Lot of noise, some arguments though, but surely fun. What a wonderful time!! Until one of my kid started complaining a neighbor kid. Moms are always great. She convinced them easily and engaged them again. Fun again, more fun this time. surely, they started enjoying more fun now.

Most of the time, just listening to kids words is more than enough. Doesn't require any reactions to it. How come Moms knows that secret?

Complain again, about some damage to toys, one little costlier new toy though. But she was cool again. I couldn't tolerate. "Hey guys, what nonsense are you doing? better leave home now". Arrogant, isn't it? Is that me??? I couldn't believe. Mom, again started convincing me this time. "You don't need to interrupt them, please. They are kids".

"No I couldn't. How come they can do this? See, kids got hurt."

Unnecessary quarrel started. I didn't realize my kids doesn't want that. I thought I am saving them. But Mom knows I am not. After few minutes, without any notice all neighbor kids left.

Long silence on following days too. Some new toys I bought to convince my kids were untouched. My kids started hating me. But Its not my mistake. They came to me with complaints, I was intended to help them. Isn't it? Whats wrong?

--- what a bad dream! I couldn't recognize what it tells me. But a bad one, never ever happen to anyone.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

அறுவடை



கொத்துக் கொத்தாய்
வலைக்குள் மாட்டும்
மீன்கள்!

சேதி கேட்டு
பின் எழும்பிய
வலை காரர்களின்
கூட்டம்
நிரம்பி வழிகிறது!

வலைக்குள்
பெரிதும் பெரிதானவைகளும்
குடியேற முட்டி மோத,
வலை போட்டவன்
விழி பிதுங்க...
அட, வலை போச்சே!!

செவ்வாய், 15 நவம்பர், 2016

விடுபட்ட சிலந்தி
இன்னும்
வீடு தேடிக்  கொண்டிருக்கிறது!

புதன், 9 நவம்பர், 2016

இனிமையில் நனைகையில்
முழுதுமாய் உணர்வோம்!
துயரிலோ -
பேரினிமை நோக்கியே
விழைவோம்!!