புதன், 27 மார்ச், 2024

வெறும்(வேறு) வாய்


வெட்கி தலை குனிந்த 

நேரங்களில் ஒரு

வெங்காயமேனும் 

வெட்டியிருக்கலாம்


எனது பங்கென

வாய்த்திருக்கும்

வீட்டு சமையலிலேனும்


தேடி தேடி சேகரித்த

தகவல்களில்

யார் யாரிடிமோ

நிரூபித்து கொண்டிருக்கிறேன்

எதற்கெனவரியாமல்


பேசு பொருளாகவோ

பாடு பொருளாகவோ

கடந்து போவதோடு

மறந்து போவதும்

பழக்கமாக்கி கொண்டேன்


அந்தந்த நேரங்களில் 

தேவைப்படுகிற

சிறு சிறு குறிப்புகள்

உடனடியாய் 

தொலைக்கப் பட்டன


நாமென்ன செய்ய?

நமக்கென்ன தேவை?

காரணம் தேடி…

தொலைக்கப்பட்டவை எல்லாம்

முதலில் ஒத்திவைக்கப்பட்டவை


செவ்வாய், 26 மார்ச், 2024

விளைகிற விதை!

சொந்தம்கொள்ளாத மண்-

முதல் படைப்பாளி।

சிறகு மொட்டவிழ்த்த நாட்களில்

சொல்லப்பட்ட கதைகளில்

சிட்டுக்குருவியை

கவ்வியபடியே கடந்துபோனது

பருந்து


சிறகு வலிக்கிற நேரம்

இறங்க இடம் கிட்டாது

கடலில் விழுந்த

ஆல்பட்ரோஸ்


பறக்கிற புறாக்களையே

குறி வைக்குமாம்

அம்புகள்


இன்னும் 

கருவால் வாத்து,

கரிச்சான்,

இருவாய் குருவிகள்

கதைகளனைத்தும்

கேட்டிருந்த மிரட்சியோடே

அடை காத்துக்கொண்டிருந்த

உழவாரன்!

பால்டிமோர் பாலம்

கவிதை கொடுத்ததும்

பெருமை பெருத்ததுமான

நெடியதோர் கூட்டுழைப்பு


தூரம் குறைத்ததும்

நேரம் மதித்ததுமாய்

இருபுறம் தினம் கடப்பு


ஊரையே எழுப்பிய சத்தம்

ஓட்டியவன் காதையும்தானே

கிழித்திருக்கும்?


விழித்தாலும் பயனிலா

நொடியின் தவிப்புகள்

கொடூரமானவை


பிடியிலிருந்து விடுபடும்

கப்பல்கள் மட்டுமா

உடைக்கின்றன பாலங்களை?



ஞாயிறு, 24 மார்ச், 2024

விளைகிற விதை!

சொந்தம்கொள்ளாத மண்-

முதல் படைப்பாளி।