செவ்வாய், 15 நவம்பர், 2016

விடுபட்ட சிலந்தி
இன்னும்
வீடு தேடிக்  கொண்டிருக்கிறது!

புதன், 9 நவம்பர், 2016

இனிமையில் நனைகையில்
முழுதுமாய் உணர்வோம்!
துயரிலோ -
பேரினிமை நோக்கியே
விழைவோம்!!

செவ்வாய், 8 நவம்பர், 2016

இயல்புக்கு மீறி
பெருத்து வீங்கிப் போனவை
காலாவதியாகின்றன -
500, 1000 என!!

வெள்ளி, 4 நவம்பர், 2016

நகர்ந்து கொண்டிருக்கிற
நதியினடியில்
நகராது  அமிழ்ந்துகிடக்கும்
பாசி  பிடித்த கற்கள்!!

செவ்வாய், 1 நவம்பர், 2016

செருக்குடன் நடை,
அலட்சியமான பார்வை
மெல்ல சுவரேறிய பூனை பார்த்து
நான் பதுங்கி பின் வர
அதே அலட்சியத்தோடு
நெருங்கித் தொட்டான்
மூன்று வயது பாலகன்!

சில சமயங்கள்
அனுபவங்கள் கற்றுத் தருவதை விட
ஆர்வம் கற்றுத் தருவது
உண்மையாயிருக்கிறது!!