சனி, 31 டிசம்பர், 2022

கொட்டும் மழையினில் 

சொட்டும் இசையுடன் 

சொட்ட சொட்டவே 

நனைகிறேன் 

நினைவிலே!


விழைகிறேன், 

நுழைகிறேன். 

ஏதோ தடுக்கவே 

கலைகிறேன் - பின் 

நகர்கிறேன் 


காரணம் நூறினை 

கையுடன் ஏந்தியே 

இயல்வன 

இரண்டையும் 

ஒத்தி வைக்கவே 

ஓய்வென கருதி 

உறைகிறேன் மறைகிறேன்!


ஓய்ந்திட பிறந்தோமா? 

உயரவே பிறந்தோர் நாம்


ஓரடி எடுத்திடுவோம் 

ஒவ்வோர் அடியிலும் 

பெருமிதம்

தொடர்ந்திடுவோம்!

2023 

ஆங்கில புத்தாண்டு 

வாழ்த்துக்கள்!!


Raining in the rain, Singing along with the music, Singing, singing, Feeling happy, Feeling content!

Making mistakes, Advancing. What to do, Learning - moving forward

The reason for holding a hundred In the hand and To be able to do The second one To hold and look at

Thoughts come and go Rising, born as we are

Taking one step Standing on our own two feet With pride Moving forward!

Where did we come from? We are born to rise

Let's hold one another Everyone on their own feet With pride Moving forward!

Happy New Year Wishes in English!!

வெள்ளி, 25 நவம்பர், 2022

பற்றலோ தொற்றலோ 

தொடர்தலன்றி 

உற்றலோ உணர்தலோ 

உய்ததில்லை


விடையென விழைத்தவர் 

வழியிலே நகர்தலே 

விதியெனப் படுதலோ?

ஒழிதலில்லை


வெளியிடா கேள்விகள் 

வெளிவரும் நாளிலோர் 

ஒளிவரும் - வினாவிது 

தொடர்தலே நலம் தரும் !



செவ்வாய், 25 அக்டோபர், 2022

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் 

பலரறியார் பாக்கியத் தால் 

 புறம் பேசுதல் பத்தி ரொம்ப தப்பான கண்ணோட்டத்துல வளந்துட்டேன். அதுவே பல சமயங்கள்ல பெரிய பலவீனமா மாறிடுச்சோன்னு தோண ஆரம்பிச்சுடுச்சு. 

ஒருத்தன் இல்லாதப்ப அவனை பத்தி யாரவது பேசுனா உடனே டாபிக்க மாத்தி டைவர்ட் பண்றதுலயே குறியா இருக்கிறது. சில சமயங்கள்ல ஸ்ட்ரெயிட்டா மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடறது இதெல்லாம் எவ்ளோ பெரிய வீக்னெஸ்னு சரியாய் தெரியலை.

இதுவே இன்னொரு சைடுல இருந்து பாத்தா, நல்லா பேசிட்டு இருந்தவன் திடிர்னு மூஞ்சிய காட்டுவான். என்னடா நடந்துச்சுனு கேக்க கூட தோணாது. நம்ம சைடுல எல்லாம் சரியாய் தான் இருக்கும். அப்புறம் எதுக்கு தொங்கணும்னு விட்டுருவோம்.

கொஞ்ச நாளைக்கு அப்புறம் நம்மள பத்தி என்னல்லாம் பேச்சு வார்த்தை போயிருக்குனு கேள்வி பட்டா ரொம்ப வருத்தமா தான் இருக்கும். 

அந்த நிமிஷம் தான். மறுபடியும் பாலன்ஸ் பண்ணி நம்ம ஒரிஜினாலிட்டிக்கே போயிடுவோம். நமக்கு இதெல்லாம் செட் ஆகாது.

எது எப்படி இருந்தாலும் சரி. நம்ம சரியாய் தான் இருக்கோம்ங்கிற ஒரு தைரியம் இருக்கே அதுக்கு தான் பெரிய சலாம்.எல்லோருக்கும் அப்படி தான். பழக்கப் பட்ட வழியிலிருந்து ஒரு போதும் விலகிடுதல் மிக கடினம்.

புதன், 22 ஜூன், 2022

சம்பிரதாயம்

 சில சம்பிரதாயங்களை மீறக்கூடாது. பெட்ரோல், மன்னிக்கணும் காஸ் போடறதுக்கு பெரிய வரிசைல காஸ்ட்கோல வெயிட் பண்ற மாதிரி. 

ஏழு மைல் தள்ளி இருக்குற வீட்ல இருந்து இதுக்குனே வண்டி எடுத்துட்டு போயி காத்திருந்து, வண்டிய பிட் பிட்டா நகத்தி நம்ம டர்ன் வர்ரப்ப கிடைக்கிற சந்தோசம் இருக்கே. அட அட. 

அது ஏன்டா வீட்டுக்கு வெளில இருக்குற காஸ் ஸ்டேஷனை விட்டுட்டு இவ்ளோ தூரம் வந்து அப்படி என்ன பெருசா மிச்சப்படுத்த போறேன்னு நானே  என்கிட்ட கேள்வி கேட்டிருக்கேன். ஆனா வேற யாரும் கேள்வி கேட்டதே இல்லை. அவங்க எல்லாம் 10, 15 மைலுக்கு மேல ஓட்டிட்டு வந்து எனக்கு முன்னாடியும் பின்னாடியும் நகட்டிட்டு இருக்காங்க.

ஏன்னா இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்.  

உங்களுக்கு அது சரியா புரியலைனா இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்றேன். ரெண்டு வருஷம் கழிச்சு இந்தியா போறப்ப ஆசை ஆசையா பாத்து தேடி பிடிச்சு  டீஷர்ட், கம்ப்யூட்டர், கடிகாரம், பொம்மை, கேமரானு வாங்கிட்டு போயி சொந்தக் காரங்கள பாக்க போனா "ஏன்டா சாக்லேட் வாங்கிட்டு வராம கண்ட கடியதை தூக்கிட்டு வந்திருக்க"னு கேப்பாங்க பாருங்க. அது மாதிரி தான்இதுவும்.  ஒரு சம்பிரதாயம். 

இந்த ஊருக்கு வந்துட்டா  முதல்ல SSN அப்ளை பண்ணனும். அதுக்கு அப்புறம் காஸ்ட்கோ மெம்பெர்ஷிப் அப்ளை பண்ணனும். அப்புறம் தான் மத்தவேலை பாக்கணும். 

கடைக்குள்ள போயி நம்ம எதுவும் பொருள் வாங்க வேணாம். அப்படியே முழு மாச கர்ப்பிணி மாதிரி அள்ளி போட்டுகிட்டு வண்டி வண்டியா நகரும் பாருங்க. அட அட. என்ன ஒரு அழகு?! 

அவ்வளவையும் அவங்களே சாப்பிடுவாங்களா இல்ல கடை போடுவாங்களானு ஆரம்பத்துல ரொம்ப சந்தேகமா தான் இருந்துச்சு. 

அப்புறம் தான் புரிஞ்சிச்சு. இதெல்லாம் ஒரு சம்பிரதாயம். வாங்கிட்டு போறதும். வந்து ரிட்டர்ன் பண்றதுக்கு வரிசைல நிக்கிறதும். 

ஷாப்பிங் பண்றதுல கூட எப்படி டிசிப்ளின் சொல்லிக் கொடுக்குறாங்க பாருங்க. கூட்டமே இல்லாத கடைக்கு போனா இந்த ஒழுக்கமெல்லாம் கத்துக்க முடியாதுங்கிறதால தான் கூட்டம் பிதுங்கிற நம்ம கடைக்கு தான் வருவாங்க. அது தான் அமெரிக்காங்கிறது. ட்  

அன்னைக்கு அப்படி தான் நம்ம கணேஷ்  டோஸ்ட் மாஸ்ட்டர்ஸ்ல ஸ்பீச் குடுக்கும் போது ஆகா ஓகோன்னு காஸ்ட்கோ புராணம் பாடுறாரு. அதுல ஒரு பைனல் டச் குடுத்தாரு பாருங்க. காஸ்ட்கோல பொண்ணு கிடைச்சிருந்தா கல்யாணமும் அங்கே தான் பண்ணிருப்பாராம். அட அட. அவ்ளோ நம்பிக்கை அந்த கடை மேல.  

அட,  ரிட்டர்ன் பண்றது ஈஸியா இருக்கும்னு யோசிச்சிருப்பாரோன்னு அப்புறம் லேட்டா  தான் புரிஞ்சது. 

அவ்வுளவு அதர பெருமை வாய்ந்த கடையோட லாரன்ஸ் எக்ஸ்பிரஸ் வே பிரான்ச்ல நானும் சுத்தி சுத்தி வரேன் 20 நிமிஷமா. பார்க்கிங் கிடைக்கவே  இல்லை. 

இதே நம்ம ஊரா இருந்தா புலம்பி தள்ளிருப்போம். இங்கே பழகிருச்சு. அமெரிக்காவுக்கு விசா கிடைக்கிறது ரொம்ப ஈஸி. ஆனா காஸ்ட்கோல வண்டி நிறுத்த இடம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.

ரெண்டாவது ரோல யாரோ கார் எடுக்க போற மாதிரி இருந்துச்சு. எப்படியாவது பிடிச்சிரணும்னு வண்டிய திருப்புறேன். டமால்னு ஒரு சத்தம். முன்னையும் பின்னையும் சின்ன அதிர்வு. 

வந்து விட்டான் பாருங்க ஒரு டுபாக்கூர் என் கார் மேல. புது BMW கார்ல முதல் டென்ட்.  

தேடி தேடி பாத்து பாத்து வாங்குன முதல் கார். அப்படியே கோவம் தலைக்கு மேல ஏறி கண்ணுல இருந்து வெடிச்சு கிளம்புது. இறங்கி போயி அவனை விடுற அடில பல்லு பத்தும் கழண்டு தொங்கணும். 

கொதிக்க கொதிக்க வண்டிய விட்டு இறங்குனா பழைய இத்துப்போன கார்ல இருந்து அமெரிக்க பெருசு ஒண்ணு இறங்குது. 

அப்படியே தலைல கைய வைக்கிறான். சாரிங்கிறான், வண்டிய வந்து தொட்டு தொட்டு பாத்து வருத்தப்படறான். 

அவன் முன்னாடி எதுமே நடக்காத மாதிரி ஹே ஹேனு நிக்கிறேன். என்ன கொடுமை சரவணன்?

அவனோட லைசென்ஸையும், இன்சூரன்ஸையும் எடுத்து நீட்டுறான். 

பல்ல கழட்ட போறேன்னு காரை விட்டு இறங்குன நான் அவன்கிட்ட பல்ல காட்டிட்டு நிக்கிறேன்.

இது உங்க ஊரு பாஸ். நீங்க அப்படியே ஓட்டிட்டு வந்து முன்னாடி, சைடுல, முடிஞ்சா காருக்கு மேல கூட இடிச்சுக்குங்க பாஸ். எங்க புதுக்கார விட உங்க பழைய காரு தான் மாஸ். ஓல்ட் இஸ் கோல்டு பாஸ்னு சொல்ற மாதிரி நிக்கிறேன். 

அட மானங்கெட்டவனேனு  எனக்குள்ள கொதிச்சுக்கிட்டிருந்த நம்ம ஊரு காட்டானுக்கு நான் அப்ப  சொன்னது ஒண்ணே ஒன்னு தான். 

இதெல்லாம் ஒரு சம்பிரதாயம் தம்பி.

தீர்க்கதரிசி

இரவு படுக்க போகும் முன்னாடி ஒரு standup கால் இருக்கும் எல்லா ஆண் மென்பொறியாளர்களுக்கும். இது அமெரிக்காவுக்கு வந்து குடியேறுன பழக்கமா இல்லை குடியேறுனவங்களோட பழக்கமான்னு தெரியலை.  வீட்டுல இருந்து தான் வேலை பாக்கணும்னு நிலைமை வரதுக்கு முன்னாடியே கூட இதே நிலைமை தான். ஆனா அப்பவும் இப்பவும் ஸ்டேட்டஸ் எடுக்குற நேரத்துல அப்படியே ஒரு வீடியோ பாத்துகிட்டு, பாட்டு கேட்டுகிட்டே வேலை  நடக்கும். என்ன தான் கவனம் வேற பக்கம் இருந்தாலும்  வேலை சுத்தமா  இருக்கணும்.

அப்படியென்ன ஆண்களுக்கு மட்டும்? கடல் கடந்த நாட்டோட வேலை செஞ்சிக்கிட்டுருக்கிற பெண் மென்பொறியாளர்கள் கொந்தளிச்சிர வேணாம். கொஞ்சம் பொறுங்க. 

எடுத்து, தண்ணி விட்டு, எல்லா பக்கமும் சுத்தமா தேச்சு, பக்கத்துல இருக்குற எந்திரத்துல அடுக்கி வைச்சு, கடைசில பட்டன தட்டி விட்டுட்டு தூங்க போறதுக்கு முன்னாடி நின்னுக்கிட்டே ஆண்கள் பண்ற வேலைய தான்  சொல்றேன்.

ஓ நீ தான் உங்க வீட்ல டிஷ் வாஷாரானு ஹி ஹீங்கிற என் நண்பன் சமையல் வேலை மட்டும் தான் பாப்பான். ஸ்டாண்டப்ல அவங்க வீட்டுல பெண்களுக்கு தான் முன்னுரிமை. 

சரி நம்ம கதைக்கு வருவோம். எப்பவும் போல facebookல தினா பக்கத்துல போட்டுருக்குற காமெடி கலாட்டாக்களை பாத்துகிட்டே பாத்திரம் கழுவி வைச்சுக்கிட்டு இருக்கேன். ஹே ஹேனு எதுக்குடா சிரிக்கிறானு மொறைச்சு மொறைச்சு பாக்குற பசங்க தூங்குறதுக்கு ரெடி ஆகிட்டு இருக்காங்க. திடிர்னு ஒரு தடங்கல். அப்படியே சிரிக்கிறதை நிப்பாட்டிட்டு சிந்தனைக்கு போயிட்டேன். எதுக்கு நம்ம மாரிமுத்து வாத்தியார் கால் பண்றாரு? 

கால் அட்டென்ட் பண்றதுக்கு முன்னாடி மாரிமுத்து வாத்தியார் பத்தி ஒரு அறிமுகம் குடுக்கலாம்னா ரொம்ப நேரமாகும். ஆகா ஓகோன்னு நான் சொல்லுவேன்னு எதிர் பார்த்தா அதான் இல்லை. எவன் தன் வாத்தியாரை பத்தி நல்ல படியா சொல்லுவான். சும்மா கழுவி கழுவி ஊத்துவேன்னு நீங்க நினைச்சா அதுவும் இல்லை. எங்க வாத்தியார் எல்லாத்துக்கும் மேல. குருங்கிறவர் எப்படியெல்லாம் இருக்க முடியுமோ அதுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு. அவரை பாத்தி சொல்ல ஆரம்பிச்சா இன்னும் ரெண்டு நாவல் நீளும். 

மறுபடியும் கதைக்கு வரேன்.

"சார் எப்படி இருக்கீங்க சார்" அப்படினு கேட்டவுடனே "என்னம்மா தங்கம். எப்படிடா இருக்க. வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களாம்மா?" அப்படினு சார் பேசுற கேக்குறதுக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கும் தெரியுமா? அந்த குரல்லேயே கடல் தேசங்கள்லாம் கடந்து நம்ம தோலை தட்டிகிட்டு நிப்பாரு எங்க வாத்தியாரு. 

அவரோட இன்னொரு முகமும் நாங்க பாத்ததுண்டு. ஒரு நாள் மார்க் கம்மியா எடுத்த அன்னைக்கு அடிக்காத குறை தான். "நீயெல்லாம் சட்டி சுரண்ட தான் போறேன்"னு  அன்னைக்கு அவர் திட்டினத்துல மண்டைல உரைச்சு ஒழுக்கமா படிச்சு, காலேஜ் போயி காலேஜ் முதல் மாணவனா வந்து, மேல படிச்சு, வேலைக்கு போயி, வாத்தியார் ஆசிலயும் நல்லவங்க பழக்கத்துலயும் இன்னைக்கு அமெரிக்கா வரைக்கும் வந்து...

"என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்க?"னு சார் போன்ல கேட்டதுல மறுபடியும் நிகழ்வுக்கு வர்றேன்.

எப்படி சொல்வேன் சார் கிட்ட ... 'சார் சட்டி தான் சார் சுரண்டிடு இருக்கேனு??'

    

திங்கள், 28 மார்ச், 2022

அம்மா

அம்மா உன்னை
விடுவது  இல்லை
விரல்கள் பிடித்தே
நடக்கிறேன் இன்னும்


அம்மா உன்னை
கடப்பதுமுண்டோ
உன் விழிகள் சுமந்தே 
கடக்குது நாட்கள் 
 

கடந்தவர் கோடி
இருந்திட்ட போதும்
பெற்றவள் நீயே
நிற்கிறாய் நெஞ்சில் 


ஊட்டிய ஒரு வாய்
சுவைக்குது இன்னும்
காட்டிய சொந்தம்
கைவிட வில்லை 


உன்முகம் தூக்கி
திரிவதால் என்னை
வெறுத்திட எவருக்கும்
முடிவது இல்லை 


மகிழ்ந்திட நூறு
நிகழ்வுள்ள போதும்
உனதரு நேரம்
இணையது இல்லை 


அருகே நீயும் 
இருந்திடவில்லை 
இருந்தால் சுவைக்கும் 
வாராய் தாயே!

ஏதென புரியா
கதையது தெரியா
விழித்தேன் துடித்தேன்
உறக்கம் கலைத்தேன் 


தாலாட்டு பாடி 
தூங்க வைக்க 
மறுபடி பிறந்து 
வந்தாலென்ன?

உனக்கொரு மகனென 
சேர்ந்த சொத்து  
எனக்கொரு மகளென 
வந்தால் கூடும்  

உன்னிடம் பேசி 
செய்கிறேன் எதையும் 
நீ கேட்கும் கேள்விக்கு 
பதிலாய் வாழ்வேன் 

உந்தன் பிம்பம்
உதிர்வதும்  இல்லை
நீயாய் நானே 
வாழ்கிறேன் தாயே! 


Mom, I will not let go of you,
Still walking, holding your fingers.

Mom, how could I ever surpass you?
The days pass, carried by your gaze.

Though millions have come and gone,
You, the one who bore me, still stay in my heart.

The one bite you fed me still tastes sweet,
The bond you showed me has never been abandoned.

Because I walk, lifting your image in my mind,
No one can ever hate me.

Though there are countless events to enjoy,
None compare to your precious moments.

You are no longer by my side,
If you were, life would be sweeter—come, mother!

I don’t understand what this story is,
I woke up, struggled, and broke my sleep.

Singing a lullaby,
What if I was reborn to put you to sleep again?

As your son, the wealth I gained,
As a daughter, I would still come back to you.

I speak to you and do everything I can,
I’ll live my life as the answer to your every question.

Your reflection will never fade away,
For I live as you, my mother.