அமைதி காப்பவர்களின்
விரல்கள் உயருவதில்லை
கண்களால் மேலோடி
கடந்த படியே
வேறொரு மிகைதொழில்
நாடி நடந்த படி…
ஒவ்வொரு முறையும்
ஓடோடி கதவு திறந்து,
வெம்பி திரும்பி,
திறப்பதும் அடைவதுமாய்
கிடக்கிறது விருப்பு!
ஒப்புதல் நோக்கி
அங்கலாய்த்தபடியே
நெடிது நீடித்து,
கரை புரண்டு,
நேரம் தின்று,
நோக்கமற்று
ஆற்றி முடித்து
இருக்கை நெருங்கும்
எல்லா காலங்களும்
பூமராங்குகளாய்
தொடங்கிய இடத்திலேயே
தொங்கி கொண்டிருக்கின்றன