திங்கள், 27 பிப்ரவரி, 2023

 சாதனை தனை

தேடியே ஒரு வேள்வியில் 

நடை போடவே 


வேதனை பல 

துரத்திடும் சில 

தோல்விகள் பயம் 

காட்டிடும் 


போதனை தனை

தூக்கியே பின் சாடிடும் 

சில கூட்டமே 


மிரட்டியே பயம் 

துரத்திடு

தலை ஏறிடும்

தினம் கிரீடமே!



வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

கொதிக்குதொரு வதக்குமொரு
கொடிய தீயடி
கனக்குமொரு கொடிய வலி
நினைவு நீயடி 


மொத்தமும் சுத்தமாய்
காணோமேடி
சுற்றமும் மொத்தமாய்
போனோதோடி?


ஊரெல்லாம் தேடுறேன்
உன்னையடி
உலகத்தை விட்டு
எங்க போன?


எத்தனை ஜென்மம்
தேடி வந்தேன்
மறுபடி விட்டுட்டு
போனதேன்டி?(2)


கொதிக்குதொரு வதக்குமொரு
கொடிய தீயடி
கனக்குமொரு கொடிய வலி
நினைவு நீயடி 


——



ஓட்டமது குறையவில்லை
நீளுதே தினம்
ஓடுமிடம் எங்கு என 
கேட்டதே இல்லை 

சேத்தது எதுக்கு
கேக்கவில்லை
சேப்பது எதுக்கு
தெரியவில்லை 

தொலைச்சதை சொல்ல
யாருமில்லை
தொலைக்காம வாழ
தெரியவில்லை 

மண்ணோட மரமும்
காத்தோட நீரும்
வளத்தது தானே
நம்ம எல்லாம் 

காசோட கரைஞ்சு
கனவோடு மறைஞ்சு
பேரெல்லாம் தொலைக்க
பொறந்தோமா நாம்?

ஓட்டமது குறையவில்லை
நீளுதே தினம்
ஓடுமிடம் எங்கு என 
கேட்டதே இல்லை