சனி, 21 செப்டம்பர், 2024

பெற்றது எல்லாம் 
பெருமிதம் தானே
மற்றது எல்லாம் 
கணக்கிட இல்லை 

கற்றிடும் நாட்கள் 
முடிந்திடவில்லை 
தொற்றிடும் மகிழ்ச்சி 
பரவிட பெருகிட 

தொட்டது எல்லாம் 
துலங்கிடும் வண்ணம் 
தந்தது எந்தன் 
நட்பென சொல்வேன் 

உற்றது உடையது 
உறவே நட்பென 
ஆசான் தந்த 
அறிவுடன் என்றும்  

மட்டென மகிழ்ச்சி 
மடையென ஓடும் 
கொட்டிடும் அருவியில் 
நனைந்திடும் தேகம் 

பெற்றது எல்லாம் 
பெருமிதம் தானே
மற்றது எல்லாம் 
கணக்கிட இல்லை 

கற்பனை கல்லில் 
கலை வடித்திடவே   
உளி தந்தாளே 
தாய்மொழி அன்னை 

சட்டென ஓடும் 
வேதனையெல்லாம் 
மெட்டுக்கள் நிறைந்ததென் 
தகதிமி தகதிமி 

இழைந்திடும் குழைந்திடும் 
இசை நிறைத்திடவே 
தகதிமி தகதிமி 






நேரம் குறைக்காத வேகம்

வளைஞ்சு வளைஞ்சு 
பறக்குது காரு 
சொடுக்கு போடும் 
நொடியிலே தாவு 
இமைக்க மறுத்து 
பாக்குற மத்த   
கண்களை கடந்து 
போகுது பாரு 

நாலே வீலா 
நானூறு வீலா 
பறக்குற தேரா 
புரியல தோழா 
ஜிவ்வு ஜிவ்வுனு 
இருக்குமோ காலு 
அட்ரீனல் பிதுங்கி 
வெடிக்கிற பீலோ  

பரவுது பாரு 
கிளம்புது நாலு 

வளைச்சு ஒடிச்சு  
பறக்குது காரு 
சொடுக்கு போடும் 
நொடியிலே தாவு 
இமைக்க மறுத்து 
பாக்குற ரெண்டு    
கண்களை கடந்து 
போகுது பாரு 

அடையிற இடத்துல 
தெரியுது காரு
என்ன தான் 
கணக்கோ எதுவும் 
புரியல 
வேகம் குறைக்காதோ 
நேரம்? 




வியாழன், 12 செப்டம்பர், 2024

 யாரோ பார்த்த கனவு
தினமும் பூக்கும் புதிது
கடந்தவை கோர்க்கும் பொழுது
ஜொலிக்கும் கண்ணில் அழகு

இன்னும் மூச்சு வேண்டும் 
உந்தன் பேச்சு வேண்டும்
உடன்வரும் போதில்  தானே  
புரியிதே பிறப்பின்  கனவு

முனைநிரல் மூளையிலே 
அறிந்திடா  சிக்கலாச்சோ
உனதரு மூச்சுக் காற்றில் 
குழைந்திடும் யாழின் ஓசை 

அதிர்வுகள் இசை மீட்ட
உணர்வினை என்ன சொல்ல
தமிழினில் வார்த்தையில்லை 
மொழியின்னும் பிறக்கவில்லை

கனவிலே வாழ்ந்து வந்தேன் 
உருவென நீயே நீயே 
விழி ஒளி நீயே நீயே 
விளக்கமே நீயே நீயே