அரசியலில் நுழைகிற
எண்ணமேதுமில்லை
சினிமாத் துறையில்
நுழைகிற ஆசையுமில்லாத
என் சமூக ஊடகப் பக்கங்களில்
மண்டிக்கிடக்கிற திரைச்செய்திகள்,
கொள்கையும், அதுவுமில்லாத
கட்சிகளும், காட்சிகளுக்குமிடையே
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
திணறித் தவிக்கிறது
தமிழும், அறிவியலும்,
நட்பும், உறவும்!
உழுதல் கைகொள்ள வேண்டும்