சுத்திப்பாக்க போறோம்
சுத்துற பூமி மேல
பக்தி மார்க்கம் போல
புதுப்புது வழித்தடம் தேடி
சேத்தோம் நெறைய ஆசை
காத்தோம் ஒவ்வொரு நாளும்
வாய்ப்பது கிடைக்க கேட்டு
வேண்டுறோம் பலமுறை நாளும்
சுத்திப்பாக்க போறோம்
சுத்துற பூமி மேல
பக்தி மார்க்கம் போல
புதுப்புது வழித்தடம் தேடி
பக்கத்து வீட்டு பப்பி
பழகிய பழக்கம் கூட
பழகிட ஆளுக இல்லை
தூக்கிட்டு ஓடுது phoneனு
சிட்டு சிட்டு குருவி
பறக்குற தூரம் கூட
பறந்திட சிறகுகள் இல்லை
தவிக்குது தவிக்குது உள்ள
சுத்திப்பாக்க போறோம்
சுத்துற பூமி மேல
பக்தி மார்க்கம் போல
புதுப்புது வழித்தடம் தேடி
பருந்தென வட்டம் அடிக்க
கெடைக்கணும் புதிய ரெக்கை
பறவை பார்வை பார்க்க
தவிக்குது உள்ள வேட்கை
பிறந்தது எதுக்குன்னு கேள்வி
திரும்ப திரும்ப ஓட...
பயணங்கள் விடை தர கூடும்
கிளம்பிடு ஆவலில் ஓடு!
ஊருக்கு ஊரு வாழும்
பேருக்கு பேரென வாழும்
முகங்களை பார்த்திட வேணும்
கூட்டிட்டு கிளம்பிட வேணும்
சுத்திப்பாக்க போறோம்
சுத்துற பூமி மேல
பக்தி மார்க்கம் போல
புதுப்புது வழித்தடம் தேடி
காட்டுக்குள்ள வாழும்
கரடி வாழ்க்கை இல்லை
வீட்டை கட்டிக்கிட்டு நாளும்
அடையிற வாடிக்கை தொல்லை
தேடுறேன் தேடுறேன் எங்கோ
இருக்குது அங்கே நோக்கம்
புரிஞ்சிட பயணத்தில் தங்கு
சேத்தது பயன்பட கூடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக