திங்கள், 19 அக்டோபர், 2026

அடமானம்


இரும்புக்கரங்கள் 

இறுக்கிப் பிடித்த பேனா 

மை தீரா பொய் நிரப்பி 


அவர் நடையில் 

இவர் நடையில் 

எவர் எவரோ 

பொடி நடையில்! 


உரிமை கோராத வரை 

திருட்டுக்கணக்கில் 

வராது


யாருக்கும் தெரியாது 

திருடுவதில் சரிந்துபோகிற 

வல்லமை


உணவா பொறியா 

உணராது 

புசித்து விரைய 


இறுகிய பிடியில் 

உடையுமோ ஆறாவது

அடையாளம்