சனி, 1 ஆகஸ்ட், 2020

Happy Friendship day

நட்பே உந்தன்
நினைவை பிடித்தே
நாட்கள் நடக்கிறதே

நினைத்தால் இனிக்கும்
தருணம் எல்லாம்
உன் முகம்
மிளிர்கிறதே

நேற்று எந்தன்
கதைக்கு எல்லாம்
செவியாய் இருந்ததும் நீ

இன்றோ பகிரும்
பிரிதொரு கதையில்
நீயே நிறைகின்றாய்

சிரிக்கும் உந்தன்
முகத்தில் நிறையும்
ஒளியில் திளைத்திருந்தோம்

உன்னுடன் கரையும்
திகட்டா நாட்களை
நீட்டிக்க கேட்டிருந்தோம்

தூரம் கடந்து
நிற்கும் போதும்
மேலும் ஒளிர்கின்றாய்

புரட்டும் 
ஞாபக செருகேட்டில்
பளிச்சென சிரிக்கிறாய் 

நாட்கள்
புதிய பூவென
வாசம் நிறைந்ததும்
உன்னாலே

பழைய பூக்கள்
மறுபடி மறுபடி
மலரும் மகத்துவம்
நிகழ்வதும்  உன்னாலே

கடந்திடும் தூரம்
களைப்பினை விரட்டிடும்
நட்பது வரமன்றோ?! - உன்
நட்பினை அடைந்ததால்
கூடுதே  தினம் தினம்
வாழ்வில்  சுவையன்றோ?!


கருத்துகள் இல்லை: