யாரோ பார்த்த கனவு
தினமும் பூக்கும் புதிது
கடந்தவை கோர்க்கும் பொழுது
ஜொலிக்கும் கண்ணில் அழகு
இன்னும் மூச்சு வேண்டும்
உந்தன் பேச்சு வேண்டும்
உடன்வரும் போதில் தானே
புரியிதே பிறப்பின் கனவு
முனைநிரல் மூளையிலே
அறிந்திடா சிக்கலாச்சோ
உனதரு மூச்சுக் காற்றில்
குழைந்திடும் யாழின் ஓசை
அதிர்வுகள் இசை மீட்ட
உணர்வினை என்ன சொல்ல
தமிழினில் வார்த்தையில்லை
மொழியின்னும் பிறக்கவில்லை
கனவிலே வாழ்ந்து வந்தேன்
உருவென நீயே நீயே
விழி ஒளி நீயே நீயே
விளக்கமே நீயே நீயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக