செவ்வாய், 12 செப்டம்பர், 2017

பயணம்

நெரிசல் மிகு சாலை,
நின்று நிதானித்து
நடை பயிலும் குறைமாத க(கா)ர்ப்பிணிகள்.
இடைவெளி நிரப்பியவாரே
புழுதி சுவாசிக்கும்
கால்நடை(வாசி)கள்.

ஓசோன் ஓட்டை,
காற்று வெளி பாழடைந்தது
பற்றியுமான விவாதங்களை
பாடல்களுக்கு இடை இடையே
கவனிப்பாரற்று
இரைந்து கொண்டிருக்கிற
வானொலிகள்.

நிரம்பி வழிந்த பணம்
போட்ட குட்டிகளாய்
பெரிய பெரிய அடுக்குமாடி
குடியிருப்புகள் -
வழியடைத்துக்கொண்டே நீள...

எதை நோக்கி
நகர்கிறேன் என்பது
எனக்கும் மட்டுமே
விளங்கவில்லை
என்பதாகவே  படுகிறது!!

கருத்துகள் இல்லை: