புதன், 6 செப்டம்பர், 2017

ஒரு நதியின் புலம்பல்

உருத்தெரியாது சிதைந்து போன 
பழைய பாதை. 

சிறையிலிருந்து வெளிவரும் 
தருணங்களில்... 
வழிதோறுமான குழிகளில் 
விழுந்தெழுந்து நகர்ந்து  
மறுபடி முடமாகி திணறுகையில் -   
"அழையா விருந்தளியோ நான்"
என்கிற  வேதனையே மிகும்!

கருத்துகள் இல்லை: