கழுத்து வலிக்க தலையை பின்திருப்பி மேலே பார்ககையில் மயக்கமே வந்துவிட்டது . உஊ…ஹோவென்ற பேரிரைச்சல் மேலும் கீழுமாய் வளைந்து நெளிந்து கடக்கையில் அடிவயிறே கலங்கியது. அதுவும் சும்மா வேடிக்கை பாத்ததுக்கே.
அப்படியே எஸ்கேப் ஆயிடலாம்னா அப்புறம் எதுக்கு இவ்ளோ பணம் செலவு பண்ணி டிக்கெட் வாங்குனோம்னு ஒரு தயக்கம். சும்மா சுத்தி வேடிக்கை பாத்துட்டு வந்ததுக்கு எதாவது வாங்கி தின்னுட்டு போயிடலாம்னு சுத்த ஆரம்பிச்சேன்.
கடக்குற ஒவ்வொரு முகத்துலயும் சந்தோசம், குதூகலம். மறுபடி மறுபடி ஏறுன பழைய ரைட்லயே ஏறப்போற கூட்டம். சிண்டு சில்லரைனு எல்லாரும் கொஞ்சம்கூட பயமேயில்லாம...
எப்படி இவ்ளோ தைரியம் இவங்களுக்கு மட்டும்?
பலவாறு குழப்பத்தோடு போயி நானும் ஒரு வரிசைல நின்னுட்டேன். குடுத்த காசுக்கு ஒரு குட்டி ரைடாவது ஏறிடனும். கண்ணை நல்ல இருக்கமா மூடிக்கனும்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.
வரிசைல காத்திருக்கிற நேரத்துல திடிர்னு அள்ளு கிளம்ப வேணாம்னு கொஞ்சம் வெளியேறி, அப்புறம் யோசிச்சு மறுபடி வந்து நின்னு. ஒரே குழப்பமா சுத்திகிட்டு இருந்தேன்.
உள்ள நுழையிற இடத்துல கொஞ்சம் டர்ராகி, குழப்பத்துல உயரம் செக் பண்ற மாதிரி நின்னு... எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாத்து.
32 வயசாச்சு. இன்னும் அப்படியொரு பயம். ஒரு வழியா ஏறி உக்காந்தாச்சு. என்னதான் பெல்ட்போட்டு டைட் பண்ணிருந்தாலும், உயர சுத்தறப்ப அப்படியே செயின் கழண்டு விழுந்துட்டா என்ன பண்றதுனு திடீர்னு குருவி கத்த, அப்படியே கண்ணைத் திறந்து கைய தூக்கி கத்தறேன்.
அல்ரெடி சுத்த ஆரம்பிச்சுட்டானுக. அட பாவிகளா! அதுக்கப்பறம் சரியா 2-3 நிமிசம் ரணகளம்.
கண்ணைல்லாம் மங்குது, வயிறு வாய் வரைக்கும் வந்ததுட்டு போகுது. கண்ணை மூடுனா கூட எந்த பிரயோசனமும் இல்லை. சும்மா கதற விட்டுடானுக.
கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோ பண்ணி இறங்கி வந்து அப்பாடானு ஆசுவாச படுத்துனதுக்கப்புறமா தான் புரிஞ்சிச்சு.
நல்ல தானே இருக்கு? அப்படி ஒன்னும் பயப்படுற அளவுக்கு இல்லையோ? மறுபடி மறுபடி வரிசைல நின்னு பெரிய ரைட்லாம் ஏறுனப்புறம் ஒன்னு புரிஞ்சது.
பயம்கிறது தள்ளி நின்னு வேடிக்கை பாக்குறவங்களுக்கு மட்டும் தான்.
குறிப்பு: சமீபத்திய சுரஜ்கந்த் நிகழ்வு மிக வருத்தத்தை அளித்தது. வாழ்க்கைல ரிஸ்க் எடுக்க எவ்வுளவோ இருக்கு. இந்த அற்ப ரிஸ்குகளை இனி விட்டு விடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக