அண்ணாந்து பாரு
ஆகாசம்
அளவில்லா கோடி
சந்தோசம்
கடிவாளம் கட்டின
குதிரைக்கு
விடுதலை கிடைச்சதா
உற்சாகம்
தியேட்டரு வெளிச்சம்
பட்டதுல
கண்ணுல மறைஞ்சு
போயிருக்கும்
பக்கத்து வீட்டு
போட்டியில
செக்குல மாடா
இருந்திருப்போம்
சேத்தத குடுத்து
செலவலிச்சு
கையில தூக்கி
குனிஞ்ச தலை
அண்ணாந்து பாரு
ஆகாசம்
அளவில்லை கோடி
சந்தோசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக