ஒழுக்கம் இல்லா வாழ்க்கையில
ஒழுங்கா எதுவும் நடப்பதில்லை
ஒழுக்கம் தெளிவா புரியும்வரை
நமக்கு கிடைச்சது எல்லாம் பத்தாக்குறை
சரக்கு அடிப்பது குத்தமில்ல
லாட்டரி தேட தப்புமில்லை
இன்னும் பலவித நெறிமுறைகள்
சொல்வது எதுவும் ஒழுக்கமில்லை
ஒழுங்கா எதையும் ஒரு முறையா
செய்வது தானே ஒழுக்கம் நண்பா
தொடர்ச்சி தானே ஒழுக்கம் நண்பா
அதை விட்டா ஒழுக்கம் போச்சு நண்பா
நினைச்சப்ப தூங்கி முடிஞ்சப்ப விழிச்சா
அங்க ஒழுக்கம் விட்டோம் தோழா
முடிஞ்சதை நாளும் முறைப்படி செஞ்சா
ஒழுக்கத்தில் ஆவோம் உத்தம சீலா!
குழப்பத்தில் இருக்கு நம்ம வாழ்க்கை
சினிமா பாத்துட்டு சேருது சேர்க்கை
அடுத்தவன் சொன்னதை ஆமாம் போட்டா
மறுபடி ஆயிடும் அடிமை வாழ்க்கை
நினைச்சதை தெளிவா பிடிச்சுக்கிட்டு
நடத்துற வழிய கத்துக்கிட்டு
போகிற வழியில பெருமை உண்டு
பிறந்த காரணம் அது தான் மச்சான்
போனதை பத்தி வருத்தபட்டா
வருமா திரும்ப போன நேரம்
இருக்கிற வேலை எடுத்துக்கிட்டு
எதிர்பார்ப்பை கொஞ்சம் நிறைவேத்தி காட்டு
அடுத்து நடப்பது எல்லாத்தையும்
கைக்குள்ள வைத்து காய நகத்து
கூட்டத்துக்குள்ள கோவிந்தா போட்டா
கிடைக்காதே மோட்சம் வாழும் வாழ்வில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக