புதன், 29 ஜூலை, 2026

மயக்கநிலை

கொதிக்க கொந்தளிக்க 

சில கவிதை கொப்பளிக்கும் 

படிக்கும் வழக்கொழித்த 

திரைப்பங்கு கனத்து நிற்கும் 

இருளை இழுத்துக்கொண்டு 

கண்கள் கதவடைக்கும் 

அசைவுச் சட்டகத்தில் 

இடை இடை இருள்கலெதும் 

மூளை உணர்வதில்லை

அறிவின் மயக்கநிலை 


திரையில் தெரிபவைகள் 

எதுவும் உண்மையில்லை 

இருக்கை அருகிருக்கும் 

உண்மை தெரியவில்லை


கட்டுக் கதைகளினிலே

ஊறிய காரணத்தால் 

பகலினில் நடப்பதில்லை 

இரவினில் புதியகதை


திரைத்துறை குட்டியிட்ட 

கூட்டம் அத்தனையும் 

வீட்டினில் புகுந்திருக்க 

கதவுகள் திறப்பதில்லை 

கைகளில் ஏந்திக்கொண்டு 

அடைந்தே கிடக்கும் நிலை 


உண்மை அத்தனையும்

வெளியே காத்திருக்க

ஏதோ தேடுகின்றோம் 

எதுவென்று தெரியவில்லை 

வெளிச்சம் படும் வரைக்கும் 

கிடைத்திட வாய்ப்புமில்லை

கருத்துகள் இல்லை: