விளைகிற விதை!
சொந்தம்கொள்ளாத மண்-
முதல் படைப்பாளி।
I am Anantha Prakash from a small south indian town Vathalagundu where great freedom fighter and writer Subramania Siva was born. By profession I am a software engineer living in Bay area. I like reading and listening. With lot of inspired people around me, started writing too 😊
நீண்ட வரிசை.
காலம் போன காலத்துல கதையடிக்கிற பெரிசுகள். வாய் பாத்துகிட்டு நிக்கிற அந்த பெரியம்மா மாதிரி வயசில ரெண்டு மூணு பேரு. விவரம் தெரியாத வயசில கைல கார்டையும் காசையும் பிடிச்சுகிட்டு ஒரு நண்டு.
இன்னும் ஒவ்வொரு ரகத்துலயும் ஒண்ணுனு நீண்டு போன வரிசைல கால் கடுக்க நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை இதே ரோதனை. எல்லாரும் ஏன் தான் கடைசி தேதி வரைக்கும் தள்ளிப்போட்டு கடத்துறாங்கனு தெரியலை. ஆனா இந்த டிசைன எங்க வீட்ல மாத்துற ஐடியா சுத்தமா இல்லைனு மட்டும் தெரிஞ்சது.
திடீர்னு நெரிசல் கூடி ஒருத்தன் மேல ஒருத்தன் நெருக்கி தள்ளுனா கவுண்டர்ல ஆள் வந்தாச்சுனு அர்த்தம்.
சமயங்கள்ல மூச்சு முட்டும். அன்னைக்கு அப்படி தான் தட்சிணாமூர்த்தி விடுக்குனு கூட்டத்தை திருப்பி தள்ளி ஒரு எகுறு எகிறிட்டு வீட்டுக்கே போயிட்டான். அவன்கிட்ட எப்படி தான் அவளோ வலுனு தெரியலை.
என்னை மாதிரி நோஞ்சானுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இத்தனைக்கும் அம்மா வகை வகையா சத்தா தான் செஞ்சு போடுவா. எனக்கு வெயிட் போடணும்னு அப்பா ரெண்டு பச்சை முட்டையை டெய்லி குடிக்க வைச்செல்லாம் முயற்சி பண்ணிட்டு தான் இருக்காரு. ஆனா என்ன உடம்பு வாகுன்னு தெரியல. தேரவேமாட்டேங்குது. இந்த கூட்டத்துல நிக்கிறதுக்குனே தனியா சாப்பிடணும்.
இங்கே மட்டும் இல்லை. தியேட்டர்ல, ரேஷன் கடைல, திருவிழா நேரத்துல, பழனி வின்ச் வரிசைல எல்லா இடத்துலயும் ஒரே மாதிரி தான்.
முட்டி மோதி, குறுகி நெளிஞ்சு, இடிபட்டு அப்படியே ஸ்பான்ஜ் மாதிரி ஆயிடுவோம்.
கடைசியா என் டர்ன் வரும் போது ஒரு தடவை பணத்தை மிஸ் பண்ணிட்டு ஙேனு முழிச்சுக்கிட்டு இருந்த கொடுமைய எல்லாம் என்னனு சொல்றது.
ஏன் இவ்ளோ கஷ்டப்படணும். மறுநாள் கட்டிக்கலாம்னு தோணலாம். அப்படி தோனிட்டா நமக்கு நேரம் சரியில்லைன்னு அர்த்தம்.
வாய்ப்பே இல்லை ராஜா. மிஸ் ஆச்சு? பியூஸ பிடிங்கிட்டு ஒரு ஆட்டம் காட்டுவனுக பாருங்க. யப்பா சாமி.
நம்ம பவர் ஸ்டார் மாதிரி டம்மி பீசு தான். பவர்புல் ஸ்டாரா மாறிடுவான். அண்ணேன் அண்ணேன்னு பின்னாடி சுத்த விட்டு கெஞ்ச விட்டு, கெத்து காட்டி... அடங்கப்பா!
சாத்தியமா சொல்றேன். இப்ப எழுதும் போதே எல்லா கெட்ட வார்த்தையும் எகிறுது. ஆனா அப்ப அம்மாஞ்சி மாதிரி தான் இருந்திருக்கேன்.
இப்ப மட்டும் என்ன? பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை. அதே அப்பிராணிய நாடு கடத்திட்டாங்க.
இருபது முப்பது வருஷத்துக்கப்புறமா இன்னைக்கு மறுபடியும் அப்படி ஒரு காத்திருப்பு நிமிடம்.
இன்னொரு கஸ்டமர் கூட இருக்கதா சொன்ன அலெக்ஸ் 15 மினுட்ஸ் வெயிட் பண்ண சொல்றதுக்கு ரொம்ப சங்கட பட்டாரு. நீங்க வேற ஏதும் ஒர்க் இருந்தா முடிச்சுட்டு கூட வாங்கன்னாரு.
இட்ஸ் ஓகே அலெக்ஸ், வெயிட் பண்றேன்னு சொல்லிட்டு வசதியான இருக்கையில் அமர்ந்து சுற்றி ஒரு நோட்டம் விட்டேன்.
ஐபோனை எடுத்து ஜிமெயில் பார்த்து, லார்க் மெசேஜ் பார்த்து, வாட்சாப் கடந்து, facebook marketplace ஒரு நோட்டம் விட்டு முடிக்கிறதுக்குள்ள அலெக்ஸ் இஸ் பேக். சரி செய்ய கொண்டு வந்த ஐபேட் குடுத்து என்ன எஸ்டிமேட் என்று கேட்டு விட்டு கிளம்புறேன். sorry for making யு wait னு சொல்லிட்டு 15 மினிட்ஸ் மசாஜ் சர்வீஸ் கார்டு கையில் நுழைத்தார்.
பரவா இல்லையே காத்திருந்தா கை மேல பலன்னு இதை தான் சொல்லிருக்காங்களா?
கார்டை எடுத்துக்கிட்டு மசாஜ் ரூமுக்குள்ள நுழைஞ்சா ஏழாயிரம் டாலர் ஓஸாகி மசாஜ் சேர். நம்ம ஊருல இந்த சேர் நாலு லட்சத்தி அறுபத்தி மூணாயிரம் ரூபா.
வசதியா உக்காந்து பட்டன அமுக்குனதும் அப்படியே கால சுத்தி ஒரு லேயர் இறுக பிடிக்க, முதுகு பின்னாடி நாலஞ்சு உருண்டை சுத்தி சுத்தி உருள, மேல இருந்து மெதுவா இறங்கி வந்து தோள்பட்டைய இறுக்கி அழுத்தி லெஃப்ட் ஷோல்டர்ல ஆரம்பிச்சு, நடு முதுகு, ரைட் ஷோல்டேர்னு மசாஜ் தொடர. கை ரெண்டையும் இறுக்கி பிடித்து மாசாஜ் தொடர்ந்து கொண்டு இருந்தது.
அந்த மசாஜ் சேருக்குள் நானும் ஸ்பான்ஜ் மாதிரி தான் அமிழ்த்தி பிழியப்பட்டு.... காத்திருப்பின் பயனை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
அட பாவிகளா இந்த மாடல இன்னுமாடா மாத்தலை???!!!
அந்த ஓலை சுவடி, ஆணி அப்புறம் தாடி வைச்ச தாத்தா. இவ்ளோ தான் கட்டமைக்கப்பட்ட பிம்பம். மறக்காம ரெண்டு மார்க் கேள்விகள். அடுத்த தலைமுறைக்கு என்ன ஞாபகம் வரும்னு தெரியலை.
எங்க தமிழ் வாத்தியார் குறளை பார்ட் பார்டா பிரிச்சு வேற ஒரு சீர் வரிசைல அமைச்சு புரிய வைப்பார். ஒரு குறள் பாக்கலாம்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
இந்த குரலை இப்படி வரிசை படுத்துவார்.
விரிநீர் வியனுலகத்து
விண்இன்று பொய்ப்பின்
உள்நின் றுடற்றும் பசி
பெருசா மெனக்கெடவே வேணாம். ஈஸியா புரிஞ்சிடும். அப்படிப்பட்ட ஆசிரியரோட மாணவன் என்னவெல்லாம் சாதிக்க முடியும்! என்னவெல்லாம் சாதிச்சிருக்கணும். ஆனா திரும்பி பாத்தா எதையோ தேடி எங்கயோ அலைஞ்சு திரிஞ்சு. சரி விடுங்க.
இடைல திடிர்னு ஒரு புத்தி வந்து பிள்ளைகளுக்கு திருக்குறள் கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதோட அடுத்த வடிவம் தான் இந்த முயற்சி. இந்த முயற்சிக்கு பின்னாடி எங்க அப்பாவும், மாரிமுத்து வாத்தியாரும், என் தமிழ் ஆசிரியர்களும் கண்டிப்பா இருக்காங்க.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
பாட்டி சுட்ட வடைய காக்கா சுட்ட கதை இல்லை. நான் சொல்லப் போறது எங்க இருந்தும் சுடாத புது கதை. நானே சுட்ட வடை.
பல சமயங்கள்ல பருப்பு வேகலைனு புகார் வந்த அதே பழைய வடையானு முகம் சுளிக்காதீங்க. நல்ல வேலை, ஊசிப் போகலைனு சந்தோசப்பட்டுக்கங்க.
வடை சுடறதுக்கு நிறைய ரெசிப்பீ இருக்கு. பல வெரைட்டியும் தான். சுட சுட எண்ணை கொதிக்கிறப்ப சரக்சரக்னு சீவுன வாழைக்காய பதமா இங்க பூசு அங்க பூசுனு பூசி மிதக்க விடறப்ப… அட அட என்ன ஒரு மணம்! விருந்துங்கிறது மூக்குல இருந்து ஆரம்பிக்கனும்.
பஜ்ஜி சொஜ்ஜி, பக்கோடாக்கு மத்தில நம்ம பருப்பு வடை வேற லெவல்.
இதான் பிளான்னு நிறைய பேசி, கடகடன்னு பாதி வேலை ஆரம்பிச்சிட்டு அதுக்கப்புறம் எதோ ஒரு புள்ளிக்கு மேல நகத்தமுடியாம நகத்தை கடிக்க ஆரம்பிச்சு… திணறி திணறி பாதில உளு(விழு)ந்த அதே வடை ரெசிப்பீ தான்.
படார்னு ஒரு ஐடியா. ரொம்ப பிரகாசமா பல்பு எரியும். எதோ வெற்றிக்கான கதவு திறந்துட்ட மாதிரி இருக்கும்.
நம்மல இன்னுமும் நம்புற அந்த ரெண்டு ஜீவன் கண்ணுக்குள்ளயும் அதே பல்ப பாத்த அந்த நிமிசம்
தமண் BGM போட்டு, சோபி பால்ராஜ் சம்பந்தமே இல்லாம கூட்டத்த கூட்டி பேக்கிரவுண்ட்ல டான்ஸ் ஆட விட்டிருப்பாரு.
ஜீப்மேல உக்காரவைச்சு டீகிளாஸ வேற குடுத்திருப்பானுக. என்ன கருமம்டா இந்த காம்பினேஸன்னு தோணலாம். ஆனா அதான் இப்ப ட்ரெண்ட் பாஸ்.
மோஸ்ட் ஆஃப் த டைம் அந்த ஸ்பாட்லயே ஸ்ட்ரக் ஆகி அதுக்கு மேல எதுவும் நகராது. பிரச்சினை என்னென்னா அதுவே நமக்கு பரம திருப்தியா இருக்கும்.
கிளாப்ஸ் எண்ட் கார்டு இல்லை. தலைவர் எண்ட்ரி ஆனா விசில் பரக்கும்ல அந்த எண்ட்ரி கார்டு.
நம்ம கதைக்கும் இதான் எண்ட்ரி.
வடை சுடலாமா?
ரெசிபி 1
தயார் நேரம்: குறைந்தது 30 நிமிடம், சில சமயங்களில் நாட்கணக்கில் கூட எடுக்கலாம்
சமையல் நேரம்: 10-15 நிமிடம் (மப்பில் இருந்தால் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகும்)
தேவையான பொருட்கள்:
1 கப் கடந்த காலம்
1/4 கப் கனவு
2 நம்புகிற ஜின் தத்துவங்கள்
தேவையான அளவு அட்வைஸ்
1/4 மேஜை கரண்டி நம்பிக்கை
1 லிட்டர் நட்பும் நம்புறவங்களும்
அது ஜின் தத்துவம்னு அங்கேயே நிக்காம இங்க வரைக்கும் கடந்து வந்ததுக்கு நன்றி. நமக்குள்ளேயே ஊறப்போட்டு பதமாகி சும்மா ஜிவ்வுனு நம்ம நினைக்கிறது தான் சரினு புதருக்குள்ள தள்ளிவிடும்ல அது தான் ஜின் தத்துவம்.
கடந்த வருட ஒண்ணாம் தேதி என்ன பேசுனோம்னு ஒரு குறிப்பு இருந்தா நல்லது. இல்லைனா பரவாயில்லை. இப்பவும் புதுசா ஆரம்பிக்கலாம்.
கடந்த காலத்தையும் கனவையும் ஒரு ரெண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து கொள்ளவும். சில சமயம் ரெண்டு மூணு நாள் ஊறவைச்சு கூட பண்ணலாம். ஆனா அதை அப்படியே மறந்துடீங்கன்னா வேஸ்ட் ஆயிடும். புது வருசத்துக்கு தயார் பண்ண முடியாம அப்புறம் புளிச்சு போயி கொஞ்சம் ஸ்மெல் வந்திரும்.
ஊற வைச்சத வடி கட்டும் போது கொஞ்சம் எடுத்து வைச்ச தத்துவத்தையும் அட்வைசையும் அளவா சேத்து மிக்ஸில போட்டு அரைக்கவும்.
அப்புறம் மானே தேனே பொன்மானே போட்டு இந்த வருஷமாவது பண்றோம்டான்னு துணிஞ்சு ஒரு 1/4 கரண்டி நம்பிக்கையை போட்டு நல்லா பதமா காய்ஞ்சிருக்குற நட்பும் நம்புறவங்ககிட்டயும் போட்டு பொன்முறுவலா வறுத்து எடுங்க. ரொம்ப நேரம் வறுத்துடாதீங்க. பதம் முக்கியம்.
சூடான சுவையான வடை ரெடி. புது வருசத்துக்கு சாப்பிட ரொம்ப சுவையை இருக்கும். மறந்துடாம லைக் போட்டிருங்க.
அடுத்த ரெசிபி நாளைக்கு.
வெங்காய போண்டா
ரெசிபி பெற பாத்தவுடனே என்ன சொல்லவரேனு புரிஞ்சிருக்கும். ஆனாலும் கதைக்குள்ள போவோம்.
கடலை மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
கோதுமை மாவு – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
துரை ரொம்ப சுவாரசியமா வைச்ச கண்ணு வாங்காம படிச்சிட்டு இருந்தான். அதுவும் ஒரே பரபரப்பா இருக்க கோவில் வாசல் முன்னாடி.
முன்னாடி சீர்காழி குரல் மட்டும் பளீர்னு கேக்குற விநாயகனே வினை தீர்ப்பவனே பாடிக்கிட்டு இருக்குன்னு என்ன நேரமா இருக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த நேரத்துலயும் அவ்ளோ பரபரப்பு. ஏன்பா இந்த மாடல மாத்த மாட்டீங்களாங்கற மாதிரியே முகத்தை வைச்சுக்கிட்டு பிள்ளையார கடந்து போயிட்டு இருக்க கூட்டத்துக்கு சத்தியமா உளுந்தூர் பேட்டை சண்முகமுமோ DB ராமச்சந்திரனோ யாருனு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.
ஆமா அது யாருன்னா கேக்குறீங்க? அவங்க தான் ஊரையே எழுப்பிட்டு இருக்க அந்த பாட்டை எழுதுனவங்க.
" டேய் மச்சான் மறுபடியும் பிரச்சினை ஆரம்பிச்சிருச்சாம்டா. ஊகான்ல ஊரடங்காம். "
அந்த பாட்டு சத்தத்துலயும் பதற வைக்க இந்த செய்திக்கு தான் பவர் இருக்கு. சரக் சரக்குனு திரும்பி பாத்த 3 பேரு பாத்திட்டான் டீ ஆத்திட்டு இருந்த கோபி பய. கொஞ்சம் டர் ஆயிட்டான்.
"அண்ணே அது பழைய பேப்பர்னே, போண்டா மடிக்க வைச்சிருந்தது. இந்தாங்க" என்று ஓரமாய் இருந்த புது நியூஸ் பேப்பர் எடுத்து நீட்டியவன் சாப்பிட்டு முதல்ல கிளம்புடாங்கிற மாதிரியே பாத்தான்.
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பான்னு அடுத்த நியூஸ் படிக்க ஆரம்பிச்சா ஒரு பக்கம் ரஸ்யாவும் உக்ரைனும் கிளப்புன புழுதி அடங்கிறதுக்குள்ள அடுத்த சங்கு ஊத்திட்டானுக. இசுரேல் பாலஸ்தின். வீட்டுக்குள்ள தான் கும்மு கும்முனு வைச்சு கும்முரனுங்கன்னா நாடு விட்டு நாடும் இதே பிரச்சினை தான் போல.
கழுத்து வலிக்க தலையை பின்திருப்பி மேலே பார்ககையில் மயக்கமே வந்துவிட்டது . உஊ…ஹோவென்ற பேரிரைச்சல் மேலும் கீழுமாய் வளைந்து நெளிந்து கடக்கையில் அடிவயிறே கலங்கியது. அதுவும் சும்மா வேடிக்கை பாத்ததுக்கே.
அப்படியே எஸ்கேப் ஆயிடலாம்னா அப்புறம் எதுக்கு இவ்ளோ பணம் செலவு பண்ணி டிக்கெட் வாங்குனோம்னு ஒரு தயக்கம். சும்மா சுத்தி வேடிக்கை பாத்துட்டு வந்ததுக்கு எதாவது வாங்கி தின்னுட்டு போயிடலாம்னு சுத்த ஆரம்பிச்சேன்.
கடக்குற ஒவ்வொரு முகத்துலயும் சந்தோசம், குதூகலம். மறுபடி மறுபடி ஏறுன பழைய ரைட்லயே ஏறப்போற கூட்டம். சிண்டு சில்லரைனு எல்லாரும் கொஞ்சம்கூட பயமேயில்லாம...
எப்படி இவ்ளோ தைரியம் இவங்களுக்கு மட்டும்?
பலவாறு குழப்பத்தோடு போயி நானும் ஒரு வரிசைல நின்னுட்டேன். குடுத்த காசுக்கு ஒரு குட்டி ரைடாவது ஏறிடனும். கண்ணை நல்ல இருக்கமா மூடிக்கனும்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.
வரிசைல காத்திருக்கிற நேரத்துல திடிர்னு அள்ளு கிளம்ப வேணாம்னு கொஞ்சம் வெளியேறி, அப்புறம் யோசிச்சு மறுபடி வந்து நின்னு. ஒரே குழப்பமா சுத்திகிட்டு இருந்தேன்.
உள்ள நுழையிற இடத்துல கொஞ்சம் டர்ராகி, குழப்பத்துல உயரம் செக் பண்ற மாதிரி நின்னு... எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாத்து.
32 வயசாச்சு. இன்னும் அப்படியொரு பயம். ஒரு வழியா ஏறி உக்காந்தாச்சு. என்னதான் பெல்ட்போட்டு டைட் பண்ணிருந்தாலும், உயர சுத்தறப்ப அப்படியே செயின் கழண்டு விழுந்துட்டா என்ன பண்றதுனு திடீர்னு குருவி கத்த, அப்படியே கண்ணைத் திறந்து கைய தூக்கி கத்தறேன்.
அல்ரெடி சுத்த ஆரம்பிச்சுட்டானுக. அட பாவிகளா! அதுக்கப்பறம் சரியா 2-3 நிமிசம் ரணகளம்.
கண்ணைல்லாம் மங்குது, வயிறு வாய் வரைக்கும் வந்ததுட்டு போகுது. கண்ணை மூடுனா கூட எந்த பிரயோசனமும் இல்லை. சும்மா கதற விட்டுடானுக.
கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோ பண்ணி இறங்கி வந்து அப்பாடானு ஆசுவாச படுத்துனதுக்கப்புறமா தான் புரிஞ்சிச்சு.
நல்ல தானே இருக்கு? அப்படி ஒன்னும் பயப்படுற அளவுக்கு இல்லையோ? மறுபடி மறுபடி வரிசைல நின்னு பெரிய ரைட்லாம் ஏறுனப்புறம் ஒன்னு புரிஞ்சது.
பயம்கிறது தள்ளி நின்னு வேடிக்கை பாக்குறவங்களுக்கு மட்டும் தான்.
குறிப்பு: சமீபத்திய சுரஜ்கந்த் நிகழ்வு மிக வருத்தத்தை அளித்தது. வாழ்க்கைல ரிஸ்க் எடுக்க எவ்வுளவோ இருக்கு. இந்த அற்ப ரிஸ்குகளை இனி விட்டு விடலாம்.