சனி, 12 ஏப்ரல், 2025

ஒழுக்கம் இல்லா வாழ்க்கையில
ஒழுங்கா எதுவும் நடப்பதில்லை
ஒழுக்கம் தெளிவா புரியும்வரை
நமக்கு கிடைச்சது எல்லாம் பத்தாக்குறை

சரக்கு அடிப்பது குத்தமில்ல
லாட்டரி தேட தப்புமில்லை
இன்னும் பலவித நெறிமுறைகள்
சொல்வது எதுவும் ஒழுக்கமில்லை

ஒழுங்கா எதையும் ஒரு முறையா
செய்வது தானே ஒழுக்கம் நண்பா
தொடர்ச்சி தானே ஒழுக்கம் நண்பா
அதை விட்டா ஒழுக்கம் போச்சு நண்பா

நினைச்சப்ப தூங்கி முடிஞ்சப்ப விழிச்சா
அங்க ஒழுக்கம் விட்டோம் தோழா
முடிஞ்சதை நாளும் முறைப்படி செஞ்சா
ஒழுக்கத்தில் ஆவோம் உத்தம சீலா!

குழப்பத்தில் இருக்கு நம்ம வாழ்க்கை
சினிமா பாத்துட்டு சேருது சேர்க்கை
அடுத்தவன் சொன்னதை ஆமாம் போட்டா
மறுபடி ஆயிடும் அடிமை வாழ்க்கை

நினைச்சதை தெளிவா பிடிச்சுக்கிட்டு
நடத்துற வழிய கத்துக்கிட்டு
போகிற வழியில பெருமை உண்டு
பிறந்த காரணம் அது தான் மச்சான்

போனதை பத்தி வருத்தபட்டா
வருமா திரும்ப போன நேரம்
இருக்கிற வேலை எடுத்துக்கிட்டு
எதிர்பார்ப்பை கொஞ்சம் நிறைவேத்தி காட்டு

அடுத்து நடப்பது எல்லாத்தையும்
கைக்குள்ள வைத்து காய நகத்து
கூட்டத்துக்குள்ள கோவிந்தா போட்டா
கிடைக்காதே மோட்சம் வாழும் வாழ்வில்

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

புத்தாண்டு வாழ்த்துக்கள்

 இருபது இருபத்தஞ்சு!

இருப்பதை enjoy பண்ணு!!

நாலரை Billion சொத்து சேத்து
ஐயாயிரம் மட்டுமே
கணக்கிருக்கு

ஏறுது ஏறுது கணக்கு மேல,
Rocket போகுது போகுது
Uranus தாண்டி!

தேடுற அந்நியன் தேடி தேடி,
போர் தொடுக்குற வேகமா
புரியவில்லை!

வாழுற பூமியை குண்டு போட்டு,
ஏவிய கணைகளை
தொலைக்க வேணும்!

பீரங்கி, Rocket Launcher
தொலைஞ்சு போக
வேண்டுறோம்!
கிடைக்குமா
புது வருச பரிசா?

சூரிய சக்தியை சேத்து வைக்க
ஓடுது ஓடுது காரு, லாரி!
வானத்தில் மிதக்குற ராக்கெட் கூட
தின்னுது பகலவன் தந்த சக்தி!

அறிவியல் அடுத்தொரு
வடிவமெடுத்து
ஆடுது, பாடுது,
அடுத்த Version...
ஆளுமோ நம்மையே
காலம் சொல்லும்!

ஓட்டுக்கு நாம தான்
கணக்கு வேணும்!
மத்த வேலைய பாக்குமோ
எந்திரங்கள்!

டீவிய ஒடைச்சு தான்
வெளிய போனா...
இணைய வலைய தான்
கிழிச்சிட வழியுமில்லை!

அறிஞ்சிட தேடிட
தொடங்கப்போனா,
முடியவே யில்லையே
எதையுமிங்கே!

விளை யாட்டுல ஜெயிக்கிற
நாடு வேணும்!
சேக்குற போட்டிய தூரப்போட்டு...
பயன்படுத்துற போட்டிதான்
தொடங்க வேணும்!

சிரிக்கிற முகங்களும்
கூட வேணும்!
அறிவியல் நம் கைக்குள்ளே
அடங்க வேணும்!

தாய் தந்தையை மதிக்கிற
நாட்கள் வேணும்!
இதுநாள் வரைப் பொக்கிஷம்
காக்க வேணும்!

தீட்டிட தீட்டிட வைரமாகும்
எம் பாட்டனும் பாட்டியும்
தந்த சேதி - உணர்ந்திடும்,
அறிந்திடும் அறிவு வேணும்!

கொடுக்குமோர் காலமே
வந்ததென்று நம்புவோம்!
நம்பிட நடக்கிற
நாளு தானே!!!

கடந்தவை ஒருமுறை
நிருத்திப் பார்த்தோம்!
அடுத்தொரு செயல்தனை
தொடங்க போறோம்!

வெல்வோமே வெல்வோமே
நல்ல பூமி
செழிக்கணும் செழிக்கணும்
எமை பெற்றதாலே!

புத்தாண்டு வாழ்த்துக்கள்
உலகமெல்லாம்!
புதுமையாய் பிறக்குது
இவ்வருடம்!

புதன், 18 டிசம்பர், 2024

சேர்ந்து வா

 சாதிக்க ஓடி வரும் 
சாதியில்லை 
சாதனைக்கு அடைமொழி தான்
தேவையில்லை 

உட்புகுத்த தினமுழைக்கும்
உம் மூடத்தனம் பற்றிடவே
பொறுப்பதில்லை எம் 
அறிவுமுகம் 

பெயர்கொண்டோர் மட்டுமின்றி 
பெரும் செயல்கண்டார்  
எம் தலைவர் அவர் 
செயலன்றி எதையுமினி 
சேர்ப்பதில்லை

பாகுபாடு பேசியுன் 
பண்பாடு காட்டிவிட்டாய் 
கூருபோட பேசுமுன்னை யாம்
கூருபோட்டு விரட்டுமுன் ஓடிப்போடா
எமை பிடித்ததொரு ஒட்டுண்ணியே!

சாதிப்பவர் துறப்பவற்றில் 
முதன்மையது சாதி 
துணைக்காலொடித்து முடமான 
அச்சதியதற்கு உனை
தூக்கிச்சுமக்க வலுவுமில்லை
நீ பதைபதைக்க படுகுழியில்
விழுந்திடவே பார்த்திடவும்
திராணியில்லை 

உனை ஒதுக்கி
நகருமொரு பண்பாடு
பாரதி தந்ததில்லை!
 
சேர்ந்து வா இனியேனும் 
மனிதனாய் எம்மோடு!

சனி, 2 நவம்பர், 2024

கதை

 கதை தான் 

கதை தான் 

எல்லாம் கதை! 


கேக்குற எல்லாம் 

பெருங்கதை 


அப்பா அம்மா 

சொன்ன கதை 

கேட்ட காலம் 

பழைய கதை 


யாரோ யாரோ 

சொல்லும் கதை


தூக்கிட்டு அலைஞ்சா  

நம்ம கதை 


கதை தான் 

கதை தான் 

எல்லாம் கதை! 


கேக்குற எல்லாம் 

பெருங்கதை 


வீட்டுக்குள்ள பேசும்  

நூறு கதை 


பக்கத்து வீட்டு 

வேறு கதை 


ஓட்டு கேட்டு 

கோடி கதை 


முன் சொன்னதை 

கேட்டா இன்னொரு கதை 


ஓடுது ஜோரா 

சினிமா கதை 


கோசம் போட்டு 

போகும் கதை 


வேசம் மறைக்க 

கிளப்பும் கதை 


கேட்டு கேட்டு 

நிசமா போச்சு 


உண்மை பொய்யி 

புரியாம தான் 

புதுசு புதுசா 

மேலும் கதை 


கதை தான் 

கதை தான் 

எல்லாம் கதை!


கேக்குற வரைக்கும் 

நீளும் கதை 


உண்மை தேட 

உறிச்சு பாத்தா 

பல்ல இளிக்கும் 

நோஞ்சான் கதை 


தாத்தா கதை 

கேளு 

பாட்டன் கதை

கேளு 

உண்மை கதை 

தேடி 

நீட்டு உன் காது 


மூளை உள்ள 

ஆளு 

வேலை செய்யும் 

பாரு 

உண்மையென்ன 

பொய்யென்ன 

பிரிச்சு போடு 


சொல்றவன் பேச்சை 

நம்புறவன் மூடன் 

தெளியிற கருத்தை 

சேமிச்சு வைச்சா 

நாம் தாண்டா தூளு 



கதை தான் 

கதை தான் 

எல்லாம் கதை!


பரம்பரை புரிஞ்சா 

மசிய மாட்டோம் 

தாத்தா கதை 

கேளு 

பாட்டன் கதை

கேளு 

உண்மை கதை 

தேடி தேடி 

நீட்டு உன் காது

சனி, 19 அக்டோபர், 2024

கொளுத்திப்போடு
கொளுத்திப்போடு 
பட்டாசு 

வீதி வெரிக்க வெரிக்க...
காது கிழிக்க கிழிக்க...


கொளுத்திப்போடு
கொளுத்திப்போடு
பட்டாசு 

சேத்து வச்ச
பணமெடுத்து
கிளம்பு 

கால்கள் வலிக்க வலிக்க 
கைகள் கணக்க கணக்க 
சேத்து வச்ச பணமெடுத்து 
பரப்பு 

புதுசு
எல்லாம் புதுசு

பிதுங்கி வழியும் 
துணிக்கடையில் 
எடுத்து போடு 
பொறட்டி பாரு
 
எடுத்து மாட்டி  
மவுசு ஜோரு 

புதுசு
எல்லாம் புதுசு
தீவாளி நேரம் வந்தா 
ஊரே புதுசு 
எங்கும் புதுசு 

பலகாரம் பஜ்ஜிக்கு 
வாயூறும் இனிப்புக்கு 
லிஸ்ட் போடு 
பலசரக்கு லிஸ்ட்  போடு 

எண்ணை தேச்சு 
குளிக்க சுகம் 
வேட்டு போட்டு 
களிக்க சுகம் 

சிறப்பு தீவாளி 
சிறப்பு 


கால்கள் வலிக்க வலிக்க 
கைகள் கணக்க கணக்க 
சேத்து வச்ச பணமெடுத்து 
வாழ்த்து 

கொடுக்க கொடுக்க 
வளரும் பணம் 
வாழ்த்து தீவாளி வாழ்த்து 
 

சனி, 21 செப்டம்பர், 2024

பெற்றது எல்லாம் 
பெருமிதம் தானே
மற்றது எல்லாம் 
கணக்கிட இல்லை 

கற்றிடும் நாட்கள் 
முடிந்திடவில்லை 
தொற்றிடும் மகிழ்ச்சி 
பரவிட பெருகிட 

தொட்டது எல்லாம் 
துலங்கிடும் வண்ணம் 
தந்தது எந்தன் 
நட்பென சொல்வேன் 

உற்றது உடையது 
உறவே நட்பென 
ஆசான் தந்த 
அறிவுடன் என்றும்  

மட்டென மகிழ்ச்சி 
மடையென ஓடும் 
கொட்டிடும் அருவியில் 
நனைந்திடும் தேகம் 

பெற்றது எல்லாம் 
பெருமிதம் தானே
மற்றது எல்லாம் 
கணக்கிட இல்லை 

கற்பனை கல்லில் 
கலை வடித்திடவே   
உளி தந்தாளே 
தாய்மொழி அன்னை 

சட்டென ஓடும் 
வேதனையெல்லாம் 
மெட்டுக்கள் நிறைந்ததென் 
தகதிமி தகதிமி 

இழைந்திடும் குழைந்திடும் 
இசை நிறைத்திடவே 
தகதிமி தகதிமி 






நேரம் குறைக்காத வேகம்

வளைஞ்சு வளைஞ்சு 
பறக்குது காரு 
சொடுக்கு போடும் 
நொடியிலே தாவு 
இமைக்க மறுத்து 
பாக்குற மத்த   
கண்களை கடந்து 
போகுது பாரு 

நாலே வீலா 
நானூறு வீலா 
பறக்குற தேரா 
புரியல தோழா 
ஜிவ்வு ஜிவ்வுனு 
இருக்குமோ காலு 
அட்ரீனல் பிதுங்கி 
வெடிக்கிற பீலோ  

பரவுது பாரு 
கிளம்புது நாலு 

வளைச்சு ஒடிச்சு  
பறக்குது காரு 
சொடுக்கு போடும் 
நொடியிலே தாவு 
இமைக்க மறுத்து 
பாக்குற ரெண்டு    
கண்களை கடந்து 
போகுது பாரு 

அடையிற இடத்துல 
தெரியுது காரு
என்ன தான் 
கணக்கோ எதுவும் 
புரியல 
வேகம் குறைக்காதோ 
நேரம்?