சில சம்பிரதாயங்களை மீறக்கூடாது. பெட்ரோல், மன்னிக்கணும் காஸ் போடறதுக்கு பெரிய வரிசைல காஸ்ட்கோல வெயிட் பண்ற மாதிரி.
ஏழு மைல் தள்ளி இருக்குற வீட்ல இருந்து இதுக்குனே வண்டி எடுத்துட்டு போயி காத்திருந்து, வண்டிய பிட் பிட்டா நகத்தி நம்ம டர்ன் வர்ரப்ப கிடைக்கிற சந்தோசம் இருக்கே. அட அட.
அது ஏன்டா வீட்டுக்கு வெளில இருக்குற காஸ் ஸ்டேஷனை விட்டுட்டு இவ்ளோ தூரம் வந்து அப்படி என்ன பெருசா மிச்சப்படுத்த போறேன்னு நானே என்கிட்ட கேள்வி கேட்டிருக்கேன். ஆனா வேற யாரும் கேள்வி கேட்டதே இல்லை. அவங்க எல்லாம் 10, 15 மைலுக்கு மேல ஓட்டிட்டு வந்து எனக்கு முன்னாடியும் பின்னாடியும் நகட்டிட்டு இருக்காங்க.
ஏன்னா இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்.
உங்களுக்கு அது சரியா புரியலைனா இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்றேன். ரெண்டு வருஷம் கழிச்சு இந்தியா போறப்ப ஆசை ஆசையா பாத்து தேடி பிடிச்சு டீஷர்ட், கம்ப்யூட்டர், கடிகாரம், பொம்மை, கேமரானு வாங்கிட்டு போயி சொந்தக் காரங்கள பாக்க போனா "ஏன்டா சாக்லேட் வாங்கிட்டு வராம கண்ட கடியதை தூக்கிட்டு வந்திருக்க"னு கேப்பாங்க பாருங்க. அது மாதிரி தான்இதுவும். ஒரு சம்பிரதாயம்.
இந்த ஊருக்கு வந்துட்டா முதல்ல SSN அப்ளை பண்ணனும். அதுக்கு அப்புறம் காஸ்ட்கோ மெம்பெர்ஷிப் அப்ளை பண்ணனும். அப்புறம் தான் மத்தவேலை பாக்கணும்.
கடைக்குள்ள போயி நம்ம எதுவும் பொருள் வாங்க வேணாம். அப்படியே முழு மாச கர்ப்பிணி மாதிரி அள்ளி போட்டுகிட்டு வண்டி வண்டியா நகரும் பாருங்க. அட அட. என்ன ஒரு அழகு?!
அவ்வளவையும் அவங்களே சாப்பிடுவாங்களா இல்ல கடை போடுவாங்களானு ஆரம்பத்துல ரொம்ப சந்தேகமா தான் இருந்துச்சு.
அப்புறம் தான் புரிஞ்சிச்சு. இதெல்லாம் ஒரு சம்பிரதாயம். வாங்கிட்டு போறதும். வந்து ரிட்டர்ன் பண்றதுக்கு வரிசைல நிக்கிறதும்.
ஷாப்பிங் பண்றதுல கூட எப்படி டிசிப்ளின் சொல்லிக் கொடுக்குறாங்க பாருங்க. கூட்டமே இல்லாத கடைக்கு போனா இந்த ஒழுக்கமெல்லாம் கத்துக்க முடியாதுங்கிறதால தான் கூட்டம் பிதுங்கிற நம்ம கடைக்கு தான் வருவாங்க. அது தான் அமெரிக்காங்கிறது. ட்
அன்னைக்கு அப்படி தான் நம்ம கணேஷ் டோஸ்ட் மாஸ்ட்டர்ஸ்ல ஸ்பீச் குடுக்கும் போது ஆகா ஓகோன்னு காஸ்ட்கோ புராணம் பாடுறாரு. அதுல ஒரு பைனல் டச் குடுத்தாரு பாருங்க. காஸ்ட்கோல பொண்ணு கிடைச்சிருந்தா கல்யாணமும் அங்கே தான் பண்ணிருப்பாராம். அட அட. அவ்ளோ நம்பிக்கை அந்த கடை மேல.
அட, ரிட்டர்ன் பண்றது ஈஸியா இருக்கும்னு யோசிச்சிருப்பாரோன்னு அப்புறம் லேட்டா தான் புரிஞ்சது.
அவ்வுளவு அதர பெருமை வாய்ந்த கடையோட லாரன்ஸ் எக்ஸ்பிரஸ் வே பிரான்ச்ல நானும் சுத்தி சுத்தி வரேன் 20 நிமிஷமா. பார்க்கிங் கிடைக்கவே இல்லை.
இதே நம்ம ஊரா இருந்தா புலம்பி தள்ளிருப்போம். இங்கே பழகிருச்சு. அமெரிக்காவுக்கு விசா கிடைக்கிறது ரொம்ப ஈஸி. ஆனா காஸ்ட்கோல வண்டி நிறுத்த இடம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.
ரெண்டாவது ரோல யாரோ கார் எடுக்க போற மாதிரி இருந்துச்சு. எப்படியாவது பிடிச்சிரணும்னு வண்டிய திருப்புறேன். டமால்னு ஒரு சத்தம். முன்னையும் பின்னையும் சின்ன அதிர்வு.
வந்து விட்டான் பாருங்க ஒரு டுபாக்கூர் என் கார் மேல. புது BMW கார்ல முதல் டென்ட்.
தேடி தேடி பாத்து பாத்து வாங்குன முதல் கார். அப்படியே கோவம் தலைக்கு மேல ஏறி கண்ணுல இருந்து வெடிச்சு கிளம்புது. இறங்கி போயி அவனை விடுற அடில பல்லு பத்தும் கழண்டு தொங்கணும்.
கொதிக்க கொதிக்க வண்டிய விட்டு இறங்குனா பழைய இத்துப்போன கார்ல இருந்து அமெரிக்க பெருசு ஒண்ணு இறங்குது.
அப்படியே தலைல கைய வைக்கிறான். சாரிங்கிறான், வண்டிய வந்து தொட்டு தொட்டு பாத்து வருத்தப்படறான்.
அவன் முன்னாடி எதுமே நடக்காத மாதிரி ஹே ஹேனு நிக்கிறேன். என்ன கொடுமை சரவணன்?
அவனோட லைசென்ஸையும், இன்சூரன்ஸையும் எடுத்து நீட்டுறான்.
பல்ல கழட்ட போறேன்னு காரை விட்டு இறங்குன நான் அவன்கிட்ட பல்ல காட்டிட்டு நிக்கிறேன்.
இது உங்க ஊரு பாஸ். நீங்க அப்படியே ஓட்டிட்டு வந்து முன்னாடி, சைடுல, முடிஞ்சா காருக்கு மேல கூட இடிச்சுக்குங்க பாஸ். எங்க புதுக்கார விட உங்க பழைய காரு தான் மாஸ். ஓல்ட் இஸ் கோல்டு பாஸ்னு சொல்ற மாதிரி நிக்கிறேன்.
அட மானங்கெட்டவனேனு எனக்குள்ள கொதிச்சுக்கிட்டிருந்த நம்ம ஊரு காட்டானுக்கு நான் அப்ப சொன்னது ஒண்ணே ஒன்னு தான்.
இதெல்லாம் ஒரு சம்பிரதாயம் தம்பி.