புதன், 23 மார்ச், 2011

முதல் வலி?

நடு சாலையில் 
நெரிசல் அறியாது 
நிதானமாய் கடந்து போகிற...

நட்ட நடு வெயிலில் 
நிழல் தேடவும் தோணாது 
வெறிச்சோடி அமர்ந்து....

நாற்றமும் குப்பையும்
ஒதுக்க தெரியாது 
ஒன்றி போய்...

சேர்த்து வைத்தது பற்றியோ
சேர்க்க வேண்டியது பற்றியோ 
உணராது 
ஆங்கங்கே தட்டுப்படும் 
பைத்தியக்காரர்கள்  மட்டுமில்லை 
யாருமே உணரவில்லையோ 
ஜப்பானிய வலி!



கருத்துகள் இல்லை: