
நன்றி - ஓவியம்: தன்யஸ்ரீ
|
நீலமில்லை வானம்
சாயம் போன துணி
இன்னும் அழகாய்!!
சூரியக் கதிர்கள்
படுகிற நேரம்
மரத்தடியே
ஒழிந்திட்ட நிழலோ
உச்சி வரை
ஏறி நின்று
எட்டி பார்க்கிறது!!
இலையின் பச்சை
திருடிய மாலை!
கூவி அழைக்க
கூடும் இருளை -
வென்று முடிக்க
கூடவே நடப்போம்
என்கிறதோ குட்டி யானை?
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக