ஓயாத வார்த்தைகள்
உன் வசம்
ஒரு போதும்
ஒரு போதும்
திகட்டாது இனித்திடும்
கேள்வி ஒன்று விடுத்த படி
பதிலும் நீயே அடுக்குவாய்
தலையாட்டும் பொம்மையாவேன்
காலை மாலை இரவுமாவாய்!
நிறுத்தும் நேர இடைவெளியில்
அரங்கேறும் புன்னகைக்கே
பிறந்து நானும் வளர்ந்தேனோ?!
பறந்து வானம் மிதந்தேனே!!
ஓயாத காதலே உன் வசம்
ஒரு போதும் குறையாதே
பெருகிடும்
கிறுக்கல்கள் கவிதையென்றாய்
விசிறிய கசக்கல்கள்
சேர்த்து வைத்தாய்
நொடி நொடியாய் இனித்ததடி
நினைக்க மேலும் சுவைக்குதடி
ஓயாத பேரலை என் வசம்
ஒரு போதும் ஓயாது மோதிடும்!!
கேள்வி ஒன்று விடுத்த படி
பதிலும் நீயே அடுக்குவாய்
தலையாட்டும் பொம்மையாவேன்
காலை மாலை இரவுமாவாய்!
நிறுத்தும் நேர இடைவெளியில்
அரங்கேறும் புன்னகைக்கே
பிறந்து நானும் வளர்ந்தேனோ?!
பறந்து வானம் மிதந்தேனே!!
ஓயாத காதலே உன் வசம்
ஒரு போதும் குறையாதே
பெருகிடும்
கிறுக்கல்கள் கவிதையென்றாய்
விசிறிய கசக்கல்கள்
சேர்த்து வைத்தாய்
நொடி நொடியாய் இனித்ததடி
நினைக்க மேலும் சுவைக்குதடி
ஓயாத பேரலை என் வசம்
ஒரு போதும் ஓயாது மோதிடும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக