ஆஸ்பத்திரி நெடி வெளில தெரியாம இருக்கனு நினைக்கிறேன். லெயோனார்ட் ஆஸ்பத்திரியை சுத்தி அழகழகா பூ இருக்கும். டாக்டருக்கு காத்திருக்கிற நேரத்துல அங்கே இருக்க குட்டி கார்டென பாத்துகிட்டு இருந்தா நேரம் ஈஸியா நகர்ந்திடும். தாத்தா கூட டாக்டர் பாக்க நான் தான் கூட போவேன். போனவுடனே டோக்கன் வாங்கணும். அப்புறம் அந்த நம்பர் கூப்பிடற வரை வெயிட் பண்ணனும். மத்த ஆஸ்பத்திரி போனா சுத்தி சுவரைத் தான் பாக்கணும். இல்லைனா பக்கத்துல உக்காந்திருக்கிற நபரோட எதையவது பேசிட்டு இருக்கலாம். நமக்கு அதுலெல்லாம் சுவாரிஸ்யம் இல்லை. கர்டென்ல இருக்குற ஒவ்வொரு பூவா பாத்துக்கிட்டிருந்தா பாதி வியாதி போயிரும்னு நினைக்கிறேன். அவ்ளோ அழகு.
தாத்தா டாக்டர்ட பேசுறப்ப எதோ பக்கத்துக்கு வீட்டுக்காரர்ட பேசுற மாதிரி ரொம்ப கேசுவலா பேசுவாரு. ஒரு தடவைக்கு மூணு தடவ எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுப்பாரு. அதே மாதிரி எந்த டாக்டரும் தாத்தா கிட்ட பந்தா காட்டினதா ஞாபகமே இல்லை. ரொம்ப இயல்பா பேச வைச்சிருவாரு. எங்க ஊரு கைராசி டாக்டர் வீடு வரைக்கும் வந்து தாத்தாவை பாத்திட்டு போவாரு. தாத்தா மேல அவ்ளோ பிரியம்.
தாத்தா அடிக்கடி செக்கப்புனு மதுரைக்கு வேற போவாரு. அப்பவும் தாத்தா கூட நான் போயிருக்கேன். சும்மா சன்னல் சீட்டுகிட்ட உக்காந்து வேடிக்கை பாக்குறதுக்கு தான். மத்தபடி நம்ம கூட போறதால ஒரு பிரயோஜனமும் இல்லை. பஸ்ல போறதுனா ஒரு சந்தோசம். அதே ஊர்க தான் திரும்ப திரும்ப கடந்து போறோம். ஆனா அப்பப்ப நிகழற சின்ன சின்ன மாற்றங்களை ரசிக்க முடியும். புதுசா முளைக்கிற கட்டிடங்கள். பச்சை பசேர்னு இருந்த நிலங்கள் திடீர்னு பொட்டலா போறதுலாம் சிமிண்ட் செடி வளக்குறதுக்கு அப்பல்லாம் தெரியாது. ஒன்னும் புரியாம கடந்த நாட்கள். ரொம்ப நாள் வரைக்கும் நம்ம அரை டிக்கட்டு தான்.
-- தாத்தா கை பிடித்து நாளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக