செவ்வாய், 26 மார்ச், 2024

சிறகு மொட்டவிழ்த்த நாட்களில்

சொல்லப்பட்ட கதைகளில்

சிட்டுக்குருவியை

கவ்வியபடியே கடந்துபோனது

பருந்து


சிறகு வலிக்கிற நேரம்

இறங்க இடம் கிட்டாது

கடலில் விழுந்த

ஆல்பட்ரோஸ்


பறக்கிற புறாக்களையே

குறி வைக்குமாம்

அம்புகள்


இன்னும் 

கருவால் வாத்து,

கரிச்சான்,

இருவாய் குருவிகள்

கதைகளனைத்தும்

கேட்டிருந்த மிரட்சியோடே

அடை காத்துக்கொண்டிருந்த

உழவாரன்!

பால்டிமோர் பாலம்

கவிதை கொடுத்ததும்

பெருமை பெருத்ததுமான

நெடியதோர் கூட்டுழைப்பு


தூரம் குறைத்ததும்

நேரம் மதித்ததுமாய்

இருபுறம் தினம் கடப்பு


ஊரையே எழுப்பிய சத்தம்

ஓட்டியவன் காதையும்தானே

கிழித்திருக்கும்?


விழித்தாலும் பயனிலா

நொடியின் தவிப்புகள்

கொடூரமானவை


பிடியிலிருந்து விடுபடும்

கப்பல்கள் மட்டுமா

உடைக்கின்றன பாலங்களை?



ஞாயிறு, 24 மார்ச், 2024

விளைகிற விதை!

சொந்தம்கொள்ளாத மண்-

முதல் படைப்பாளி।

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

காத்திருப்பு

நீண்ட வரிசை. 

காலம் போன காலத்துல கதையடிக்கிற பெரிசுகள். வாய் பாத்துகிட்டு நிக்கிற அந்த பெரியம்மா மாதிரி வயசில ரெண்டு மூணு பேரு. விவரம் தெரியாத வயசில கைல கார்டையும் காசையும் பிடிச்சுகிட்டு ஒரு நண்டு.

இன்னும் ஒவ்வொரு ரகத்துலயும் ஒண்ணுனு நீண்டு போன வரிசைல கால் கடுக்க நேரம் ஓடிக் கொண்டிருந்தது. 

ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை இதே ரோதனை. எல்லாரும் ஏன் தான் கடைசி தேதி வரைக்கும் தள்ளிப்போட்டு கடத்துறாங்கனு தெரியலை. ஆனா இந்த டிசைன எங்க வீட்ல மாத்துற ஐடியா சுத்தமா இல்லைனு மட்டும் தெரிஞ்சது. 

திடீர்னு நெரிசல் கூடி ஒருத்தன் மேல ஒருத்தன் நெருக்கி தள்ளுனா கவுண்டர்ல ஆள் வந்தாச்சுனு அர்த்தம். 

சமயங்கள்ல மூச்சு முட்டும். அன்னைக்கு அப்படி தான் தட்சிணாமூர்த்தி விடுக்குனு கூட்டத்தை திருப்பி தள்ளி ஒரு எகுறு எகிறிட்டு வீட்டுக்கே போயிட்டான். அவன்கிட்ட எப்படி தான் அவளோ வலுனு தெரியலை. 

என்னை மாதிரி நோஞ்சானுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இத்தனைக்கும் அம்மா வகை வகையா சத்தா தான் செஞ்சு போடுவா. எனக்கு வெயிட் போடணும்னு அப்பா ரெண்டு பச்சை முட்டையை  டெய்லி குடிக்க வைச்செல்லாம் முயற்சி பண்ணிட்டு தான் இருக்காரு. ஆனா என்ன உடம்பு வாகுன்னு தெரியல. தேரவேமாட்டேங்குது. இந்த கூட்டத்துல நிக்கிறதுக்குனே தனியா சாப்பிடணும்.

இங்கே மட்டும் இல்லை. தியேட்டர்ல, ரேஷன் கடைல, திருவிழா நேரத்துல, பழனி வின்ச் வரிசைல எல்லா இடத்துலயும் ஒரே மாதிரி தான். 

முட்டி மோதி, குறுகி நெளிஞ்சு, இடிபட்டு அப்படியே ஸ்பான்ஜ் மாதிரி ஆயிடுவோம்.  

கடைசியா என் டர்ன் வரும் போது  ஒரு தடவை பணத்தை மிஸ் பண்ணிட்டு ஙேனு முழிச்சுக்கிட்டு இருந்த கொடுமைய எல்லாம் என்னனு சொல்றது.

ஏன் இவ்ளோ  கஷ்டப்படணும். மறுநாள் கட்டிக்கலாம்னு தோணலாம். அப்படி தோனிட்டா நமக்கு நேரம் சரியில்லைன்னு அர்த்தம். 

வாய்ப்பே இல்லை ராஜா. மிஸ் ஆச்சு? பியூஸ பிடிங்கிட்டு ஒரு ஆட்டம் காட்டுவனுக பாருங்க. யப்பா சாமி. 

நம்ம பவர் ஸ்டார் மாதிரி டம்மி பீசு தான். பவர்புல்  ஸ்டாரா மாறிடுவான். அண்ணேன் அண்ணேன்னு பின்னாடி சுத்த விட்டு கெஞ்ச விட்டு, கெத்து காட்டி... அடங்கப்பா! 

சாத்தியமா சொல்றேன். இப்ப எழுதும் போதே எல்லா கெட்ட வார்த்தையும் எகிறுது.  ஆனா அப்ப அம்மாஞ்சி மாதிரி தான் இருந்திருக்கேன். 

இப்ப மட்டும் என்ன? பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை. அதே அப்பிராணிய நாடு  கடத்திட்டாங்க.

இருபது முப்பது வருஷத்துக்கப்புறமா இன்னைக்கு மறுபடியும் அப்படி ஒரு காத்திருப்பு நிமிடம்.

இன்னொரு கஸ்டமர் கூட இருக்கதா சொன்ன அலெக்ஸ் 15 மினுட்ஸ் வெயிட் பண்ண சொல்றதுக்கு ரொம்ப சங்கட பட்டாரு. நீங்க வேற ஏதும் ஒர்க் இருந்தா முடிச்சுட்டு கூட வாங்கன்னாரு. 

இட்ஸ் ஓகே அலெக்ஸ், வெயிட் பண்றேன்னு சொல்லிட்டு வசதியான இருக்கையில் அமர்ந்து சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். 

ஐபோனை எடுத்து ஜிமெயில் பார்த்து, லார்க் மெசேஜ் பார்த்து, வாட்சாப் கடந்து, facebook marketplace ஒரு நோட்டம் விட்டு முடிக்கிறதுக்குள்ள அலெக்ஸ் இஸ் பேக்.  சரி செய்ய கொண்டு வந்த ஐபேட் குடுத்து என்ன எஸ்டிமேட் என்று கேட்டு விட்டு கிளம்புறேன். sorry for making யு wait னு சொல்லிட்டு 15 மினிட்ஸ் மசாஜ் சர்வீஸ் கார்டு கையில் நுழைத்தார். 

பரவா இல்லையே காத்திருந்தா கை மேல பலன்னு இதை தான் சொல்லிருக்காங்களா?

கார்டை எடுத்துக்கிட்டு மசாஜ் ரூமுக்குள்ள நுழைஞ்சா ஏழாயிரம் டாலர் ஓஸாகி மசாஜ் சேர். நம்ம ஊருல இந்த சேர் நாலு லட்சத்தி அறுபத்தி மூணாயிரம் ரூபா. 

வசதியா உக்காந்து பட்டன அமுக்குனதும் அப்படியே  கால சுத்தி ஒரு லேயர் இறுக பிடிக்க, முதுகு பின்னாடி நாலஞ்சு உருண்டை சுத்தி சுத்தி உருள, மேல இருந்து மெதுவா இறங்கி வந்து தோள்பட்டைய இறுக்கி அழுத்தி லெஃப்ட் ஷோல்டர்ல ஆரம்பிச்சு, நடு முதுகு, ரைட் ஷோல்டேர்னு மசாஜ் தொடர.  கை ரெண்டையும் இறுக்கி பிடித்து மாசாஜ் தொடர்ந்து கொண்டு இருந்தது. 

அந்த மசாஜ் சேருக்குள் நானும் ஸ்பான்ஜ் மாதிரி தான் அமிழ்த்தி பிழியப்பட்டு.... காத்திருப்பின் பயனை அனுபவித்துக் கொண்டிருந்தேன். 

அட பாவிகளா இந்த மாடல இன்னுமாடா மாத்தலை???!!!

செவ்வாய், 31 அக்டோபர், 2023

திருக்குறள் கதைகள்

அந்த ஓலை சுவடி, ஆணி அப்புறம் தாடி வைச்ச தாத்தா. இவ்ளோ தான் கட்டமைக்கப்பட்ட பிம்பம். மறக்காம ரெண்டு மார்க் கேள்விகள். அடுத்த தலைமுறைக்கு என்ன ஞாபகம் வரும்னு தெரியலை. 

எங்க தமிழ் வாத்தியார் குறளை பார்ட் பார்டா பிரிச்சு வேற ஒரு சீர் வரிசைல அமைச்சு புரிய வைப்பார். ஒரு குறள் பாக்கலாம் 

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து 
உள்நின் றுடற்றும் பசி

இந்த குரலை இப்படி வரிசை படுத்துவார். 

விரிநீர் வியனுலகத்து 
    விண்இன்று பொய்ப்பின் 
        உள்நின் றுடற்றும் பசி 

பெருசா மெனக்கெடவே வேணாம். ஈஸியா புரிஞ்சிடும். அப்படிப்பட்ட ஆசிரியரோட மாணவன் என்னவெல்லாம் சாதிக்க முடியும்! என்னவெல்லாம் சாதிச்சிருக்கணும். ஆனா திரும்பி பாத்தா எதையோ தேடி எங்கயோ அலைஞ்சு திரிஞ்சு. சரி விடுங்க.

இடைல திடிர்னு ஒரு புத்தி வந்து பிள்ளைகளுக்கு திருக்குறள் கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதோட அடுத்த வடிவம் தான் இந்த முயற்சி. இந்த முயற்சிக்கு பின்னாடி எங்க அப்பாவும், மாரிமுத்து வாத்தியாரும், என் தமிழ் ஆசிரியர்களும் கண்டிப்பா இருக்காங்க.


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து 
உள்நின் றுடற்றும் பசி



செவ்வாய், 21 மார்ச், 2023

சாதி

துணைக்கு ஆள் (கால்)

இருக்கிற தைரியம்

துணிந்து உடைத்தால்

தெரியும் இலட்சணம்

சதி

சனி, 11 மார்ச், 2023


எளியவாம் பலவரி படைத்தல் அரியவாம்

உரைபொருள் உணர்தல்


கற்றல் நிற்றல் குவித்திடும்

பெரும் சிக்கல்



நீளும் முதலடி நிறைக்கும் ஈற்றடி

உணர தொடங்கும் சிறப்பே




                                                    உற்சாகம் ஊதிப்பெருக்கிடும்

                                                    விந்தை தெரிந்தவன் வயிர்

                                                    ஏறி மிதித்ததோ விஞ்ஞானம்?



ஏந்திய கை இறங்கும்வரை யாம்

வேட்பாளன்

எனக்கெது முடியும் எடுத்திட ஆவேன்

படைப்பாளன்!