இரைந்த இசை நிறுத்தி
இமையமர சுவைத்தேன்
செண்பகம், செவ்வாயன்
சுடலை குயில், கோகிலம்
பச்சை வாயன் - சேரக்
கோர்த்த இசையில்
இலயித்து கிடைந்த மனசு
கேட்டது - குயில்களே
பாடுக தமிழ்!
I am Anantha Prakash from a small south indian town Vathalagundu where great freedom fighter and writer Subramania Siva was born. By profession I am a software engineer living in Bay area. I like reading and listening. With lot of inspired people around me, started writing too 😊
வெட்கி தலை குனிந்த
நேரங்களில் ஒரு
வெங்காயமேனும்
வெட்டியிருக்கலாம்
எனது பங்கென
வாய்த்திருக்கும்
வீட்டு சமையலிலேனும்
தேடி தேடி சேகரித்த
தகவல்களில்
யார் யாரிடிமோ
நிரூபித்து கொண்டிருக்கிறேன்
எதற்கெனவரியாமல்
பேசு பொருளாகவோ
பாடு பொருளாகவோ
கடந்து போவதோடு
மறந்து போவதும்
பழக்கமாக்கி கொண்டேன்
அந்தந்த நேரங்களில்
தேவைப்படுகிற
சிறு சிறு குறிப்புகள்
உடனடியாய்
தொலைக்கப் பட்டன
நாமென்ன செய்ய?
நமக்கென்ன தேவை?
காரணம் தேடி…
தொலைக்கப்பட்டவை எல்லாம்
முதலில் ஒத்திவைக்கப்பட்டவை
சிறகு மொட்டவிழ்த்த நாட்களில்
சொல்லப்பட்ட கதைகளில்
சிட்டுக்குருவியை
கவ்வியபடியே கடந்துபோனது
பருந்து
சிறகு வலிக்கிற நேரம்
இறங்க இடம் கிட்டாது
கடலில் விழுந்த
ஆல்பட்ரோஸ்
பறக்கிற புறாக்களையே
குறி வைக்குமாம்
அம்புகள்
இன்னும்
கருவால் வாத்து,
கரிச்சான்,
இருவாய் குருவிகள்
கதைகளனைத்தும்
கேட்டிருந்த மிரட்சியோடே
அடை காத்துக்கொண்டிருந்த
உழவாரன்!
கவிதை கொடுத்ததும்
பெருமை பெருத்ததுமான
நெடியதோர் கூட்டுழைப்பு
தூரம் குறைத்ததும்
நேரம் மதித்ததுமாய்
இருபுறம் தினம் கடப்பு
ஊரையே எழுப்பிய சத்தம்
ஓட்டியவன் காதையும்தானே
கிழித்திருக்கும்?
விழித்தாலும் பயனிலா
நொடியின் தவிப்புகள்
கொடூரமானவை
பிடியிலிருந்து விடுபடும்
கப்பல்கள் மட்டுமா
உடைக்கின்றன பாலங்களை?