வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

வார்த்தைகள்
சர்வ சாதரணமாய் 
வசப்படும்

மறுபடி படிக்கையில் 
தலையேறி 
போதை நிக்கும் ...
நீ தானா எழுதியது???
நம்ப மறுக்கும்.

காலையில் நிகழ்ந்தது
சாதரணமில்லை தான்
மதியம் நிகழ்வதோ
அதற்கும் மேலே


நொடிக்கு நொடி
இது அதே வாழ்க்கை தானா
என தலைசுற்றும்!

தெளிவாய் நகர்ந்த 
நாட்கள் அவை!
எளிதாய் வாய்ப்பதில்லை
எல்லோருக்கும்!

இனிதாய் வாய்த்தது
உன்னோடு!


ஆசிர்வதிக்கப்பட்ட
நொடிகளில்
ஒவ்வொரு தடவையும்
உடனிருந்தாய்!

நீ உடனிருக்கிற
நொடிகளில்
ஒவ்வொரு முறையும்
ஆசிர்வதிக்கப்படிருக்கிறேன்!

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கோவில் வாசம்

ஏறிப் போன
விலைவாசியில் 
தலைசுற்ற
குற்றப்பத்திரிக்கை வாசிக்க
கிளம்பினேன்!

முழம் 
அம்பது ரூபாயாம்
கூவி வரவேற்றாள்
கோவில் வாசலில்
பூக்காரி!

திங்கள், 19 டிசம்பர், 2011

பகட்டு கூடாரத்திற்குள்
தாய் மொழி வாசமில்லை
தாய் தந்தை
உடனில்லை
கொஞ்சம் மது, மாது,
சிலு சிலு நடனம்.
எல்லாம் மறந்திருக்க
இனிமையாய் தானிருக்கும்...
உறைக்கும் ஒரு நொடி
தொடும் வரை!!!

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

ஊன்று கோல்

காது வழியே
உன்னிப்பாய்
சுற்றுபுறம் உள்வாங்கி
நடை போடுகிற
நண்பனுக்கு
சின்ன சின்ன
தடுமாற்றங்கள்!

அங்குமிங்கும் 
தட்டி தட்டி
ஊன்றுகோல் பற்றி
தெளிவாகவே
சாலை கடக்கிறான்!

எல்லாம் தெளிவாகவே
தெரிகிற
நான் தட்டு தடுமாறியதில்
எத்தனை காயங்கள்...
ஊன்று கோல்களுக்கு!!

வெள்ளி, 14 அக்டோபர், 2011

இனிக்கிற நினைவுகள்!
உன்னோடு நானிருக்கிற
அத்தனை புகைப்படங்களையும்
மறுபடி ஒருமுறை
புரட்டி பார்த்துவிட்டு
பாதுகாத்து வைக்கிறேன்
இதய அறைக்குள்
திரும்பவும்!
 பூக்கள் 
பறிக்கப்படுகின்றன
முட்களுக்கிடையில்
பாதுகாப்பாயிருப்பினும்  கூட!

கோவில் வாசலில்,
பேருந்து நிறுத்தங்களில்,
கூட்டம் கூடுகின்ற வழியிலெங்கும்
கூவி கூவி விற்கப்படுகின்றன!

அது ஒரு
பெண் பார்க்கும் படலம்
ஒரு பூவை
பூச்சூடி நின்றாள்!!

சனி, 26 மார்ச், 2011

விளையாட்டு திடல்

கோலிக்குண்டு,
கிட்டிபுல்,
கன்னமூச்சியில் ரெண்டாகும்
தெரு.
எல்லாம்
தாத்தா காலத்து வீட்டு
நினைவுகள்!

சின்ன சின்ன
விளையாட்டுக்கள்.
ஊரே விளையாட்டு திடல்.

கிரிக்கெட், டென்னிஸ்,
வாலிபால்
விளையாட ஆசைபடுகிற
பிள்ளைக்கு  இடமே இல்லை.

இரு, நான்கு சக்கர
ஆக்கிரமிப்பின்
சின்ன சின்ன
இடைவெளிகளே
விளையாட்டு திடல்!

ஒரு வேளை
இந்த இடைவெளிகளை
பெருமிதத்தோட
நினைவுகூர்கிற
காலம் வரலாம்...
பேர பிள்ளைகள்  
காலத்தில்!