மது கிண்ணங்களின்
உள்ளமர்ந்து,
மிதந்து,
கண்மூடி,
கைகள் படர்ந்து,
கால் பாதம்
பியானோ இசைக்கிற வாகில்
காற்தடம் நகர்த்தி,
நீந்தி..
கரையேற மனமின்றி
நீட்டி
நெடுதூரம் பயணித்த
நாட்கள்
பதிந்து வைத்திருந்த
ஒலி ஒளி நாடா
தேயத் தேய அழுகிறது
கொட்டி தெரிக்கிற
சுவையோடு
அகண்டு ஓடும்
ஆற்றங்கரை
அருகாமையற்று,
ஏரி ஓரம்
காத்திருப்பதை
அறியாமையோ
சோம்பேறித் தனமோ
இல்லையென
விதி மேல் பழி சொல்லி
வீணே கிடக்கிறது
ஓடம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக