பிள்ளைக்கு என்னவெல்லாம்
பிடிக்குமென பட்டியல் நீட்டி,
அதிகாலைக்கும் அதிகாலை எழுந்து
வகை வகை
பண்டங்கள் அடுக்கி
காத்திருக்கிறவளிடம்...
கைமேல் பலனாய்
'வயிறு சரியில்லைம்மா'.
கேட்டதும் பதறுகிறவளிடம்
எரிந்து விழுந்து,
விலகி நடக்கிறவனுக்கு
சுருட்டி எடுக்கிறது -
நேற்றிட்ட கும்மாளமும்
அளவில்லா மதுபானமும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக