சண்முகி அம்மாள் சமையல் பற்றி சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவை. அதுவும் தான் சமைத்த முறை பற்றியும், அதன் பின்னணி பற்றியும் அவங்க சொல்றதை கேட்குறதுலயே பாதி வயிறும் மனசும் நிரம்பிடும். சமையல் அனுபவத்தில் அம்மாவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. ஒற்றை ஆளாக காய் வாங்குவதிலிருந்து பாத்திரம் அடுக்குவது வரைக்கும் ஆல் ரவுண்டர். கொஞ்ச நஞ்சமா என்ன? ஆறாவது வயதிலேயே கரண்டி தூக்கியவராயிற்றே.
நேற்று வரை தானுண்டு தன் வேலை உண்டென்று தான் இருந்தார். இதே போல் இதற்கு முன் எத்தனையோ முறை நடந்திருக்கிறது. திருவிழாவுக்கு வந்த சொந்தக்காரர்கள் ஒரே அடியாய் டேரா போட்டு அடித்த கூத்தெல்லாம் இந்த ஊருக்கே தெரியும். சண்முகி அம்மாளை அன்றைக்கு படுத்தின பாடெல்லாம். கேட்டா காது வழியே இரத்தம் வந்திரும். கொஞ்சம் கூட ஒய்வு கிடைக்காமல் நாள் பூராவும் சமைத்து போட்டு, வேலை பாத்து இரவு தூங்கபோகையில் மணி இரண்டுக்கு மேலாகி விடும். அனால் அதெல்லாம் அவர் பெரிதாய் எடுத்துக் கொண்டதே இல்லை.
இந்த முறை வந்த பங்காளி கூட்டத்தின் சலம்பல் கொஞ்சம் ஓவராக தான் இருந்தது. காரியத்துக்கு வந்தோமா, போனமான்னு இல்லாம வீட்டையே அலங்கோலம் படுத்திய பாடு இருக்குதே? அப்பா சாமி.
சரி, அதை விடுங்க. திடிர்னு சண்முகி அம்மாளுக்கு எங்கே இருந்து இவ்ளோ கோபம் வந்தது? வீட்டு பொறுப்பை என் கிட்ட கொடு இப்பவேனு இவ்ளோ பிடிவாதமா இருக்காங்க? அவனுகளை ஓட விடறேனா இல்லையானு பாருங்கறாங்க. எதுவும் புரியலை.
அவங்க கரண்டி பக்குவத்துல வாய் வழியே மூளைக்கு ஏறுன ருசி நம்பி குடுக்கலாம்ங்குது. அவங்களுக்கு தெரியாத பக்குவமாங்குது? வயித்துப் பாட்டுக்குனு தலையாட்டுனது போதும்பா, கொஞ்சம் பாத்து பக்குவமா யோசினு சொல்லறாரு பக்கத்து வீட்டு மலையாள மாமா. இன்னும் ஒரு முடிவுக்கும் வரலை மாமா! யோசிக்கிறேன்னு சொல்லிருக்கேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக