பாட்டி சுட்ட வடைய காக்கா சுட்ட கதை இல்லை. நான் சொல்லப் போறது எங்க இருந்தும் சுடாத புது கதை. நானே சுட்ட வடை.
பல சமயங்கள்ல பருப்பு வேகலைனு புகார் வந்த அதே பழைய வடையானு முகம் சுளிக்காதீங்க. நல்ல வேலை, ஊசிப் போகலைனு சந்தோசப்பட்டுக்கங்க.
வடை சுடறதுக்கு நிறைய ரெசிப்பீ இருக்கு. பல வெரைட்டியும் தான். சுட சுட எண்ணை கொதிக்கிறப்ப சரக்சரக்னு சீவுன வாழைக்காய பதமா இங்க பூசு அங்க பூசுனு பூசி மிதக்க விடறப்ப… அட அட என்ன ஒரு மணம்! விருந்துங்கிறது மூக்குல இருந்து ஆரம்பிக்கனும்.
பஜ்ஜி சொஜ்ஜி, பக்கோடாக்கு மத்தில நம்ம பருப்பு வடை வேற லெவல்.
இதான் பிளான்னு நிறைய பேசி, கடகடன்னு பாதி வேலை ஆரம்பிச்சிட்டு அதுக்கப்புறம் எதோ ஒரு புள்ளிக்கு மேல நகத்தமுடியாம நகத்தை கடிக்க ஆரம்பிச்சு… திணறி திணறி பாதில உளு(விழு)ந்த அதே வடை ரெசிப்பீ தான்.
படார்னு ஒரு ஐடியா. ரொம்ப பிரகாசமா பல்பு எரியும். எதோ வெற்றிக்கான கதவு திறந்துட்ட மாதிரி இருக்கும்.
நம்மல இன்னுமும் நம்புற அந்த ரெண்டு ஜீவன் கண்ணுக்குள்ளயும் அதே பல்ப பாத்த அந்த நிமிசம்
தமண் BGM போட்டு, சோபி பால்ராஜ் சம்பந்தமே இல்லாம கூட்டத்த கூட்டி பேக்கிரவுண்ட்ல டான்ஸ் ஆட விட்டிருப்பாரு.
ஜீப்மேல உக்காரவைச்சு டீகிளாஸ வேற குடுத்திருப்பானுக. என்ன கருமம்டா இந்த காம்பினேஸன்னு தோணலாம். ஆனா அதான் இப்ப ட்ரெண்ட் பாஸ்.
மோஸ்ட் ஆஃப் த டைம் அந்த ஸ்பாட்லயே ஸ்ட்ரக் ஆகி அதுக்கு மேல எதுவும் நகராது. பிரச்சினை என்னென்னா அதுவே நமக்கு பரம திருப்தியா இருக்கும்.
கிளாப்ஸ் எண்ட் கார்டு இல்லை. தலைவர் எண்ட்ரி ஆனா விசில் பரக்கும்ல அந்த எண்ட்ரி கார்டு.
நம்ம கதைக்கும் இதான் எண்ட்ரி.
வடை சுடலாமா?
ரெசிபி 1
தயார் நேரம்: குறைந்தது 30 நிமிடம், சில சமயங்களில் நாட்கணக்கில் கூட எடுக்கலாம்
சமையல் நேரம்: 10-15 நிமிடம் (மப்பில் இருந்தால் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகும்)
தேவையான பொருட்கள்:
1 கப் கடந்த காலம்
1/4 கப் கனவு
2 நம்புகிற ஜின் தத்துவங்கள்
தேவையான அளவு அட்வைஸ்
1/4 மேஜை கரண்டி நம்பிக்கை
1 லிட்டர் நட்பும் நம்புறவங்களும்
அது ஜின் தத்துவம்னு அங்கேயே நிக்காம இங்க வரைக்கும் கடந்து வந்ததுக்கு நன்றி. நமக்குள்ளேயே ஊறப்போட்டு பதமாகி சும்மா ஜிவ்வுனு நம்ம நினைக்கிறது தான் சரினு புதருக்குள்ள தள்ளிவிடும்ல அது தான் ஜின் தத்துவம்.
கடந்த வருட ஒண்ணாம் தேதி என்ன பேசுனோம்னு ஒரு குறிப்பு இருந்தா நல்லது. இல்லைனா பரவாயில்லை. இப்பவும் புதுசா ஆரம்பிக்கலாம்.
கடந்த காலத்தையும் கனவையும் ஒரு ரெண்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து கொள்ளவும். சில சமயம் ரெண்டு மூணு நாள் ஊறவைச்சு கூட பண்ணலாம். ஆனா அதை அப்படியே மறந்துடீங்கன்னா வேஸ்ட் ஆயிடும். புது வருசத்துக்கு தயார் பண்ண முடியாம அப்புறம் புளிச்சு போயி கொஞ்சம் ஸ்மெல் வந்திரும்.
ஊற வைச்சத வடி கட்டும் போது கொஞ்சம் எடுத்து வைச்ச தத்துவத்தையும் அட்வைசையும் அளவா சேத்து மிக்ஸில போட்டு அரைக்கவும்.
அப்புறம் மானே தேனே பொன்மானே போட்டு இந்த வருஷமாவது பண்றோம்டான்னு துணிஞ்சு ஒரு 1/4 கரண்டி நம்பிக்கையை போட்டு நல்லா பதமா காய்ஞ்சிருக்குற நட்பும் நம்புறவங்ககிட்டயும் போட்டு பொன்முறுவலா வறுத்து எடுங்க. ரொம்ப நேரம் வறுத்துடாதீங்க. பதம் முக்கியம்.
சூடான சுவையான வடை ரெடி. புது வருசத்துக்கு சாப்பிட ரொம்ப சுவையை இருக்கும். மறந்துடாம லைக் போட்டிருங்க.
அடுத்த ரெசிபி நாளைக்கு.
வெங்காய போண்டா
ரெசிபி பெற பாத்தவுடனே என்ன சொல்லவரேனு புரிஞ்சிருக்கும். ஆனாலும் கதைக்குள்ள போவோம்.
கடலை மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
கோதுமை மாவு – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
துரை ரொம்ப சுவாரசியமா வைச்ச கண்ணு வாங்காம படிச்சிட்டு இருந்தான். அதுவும் ஒரே பரபரப்பா இருக்க கோவில் வாசல் முன்னாடி.
முன்னாடி சீர்காழி குரல் மட்டும் பளீர்னு கேக்குற விநாயகனே வினை தீர்ப்பவனே பாடிக்கிட்டு இருக்குன்னு என்ன நேரமா இருக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த நேரத்துலயும் அவ்ளோ பரபரப்பு. ஏன்பா இந்த மாடல மாத்த மாட்டீங்களாங்கற மாதிரியே முகத்தை வைச்சுக்கிட்டு பிள்ளையார கடந்து போயிட்டு இருக்க கூட்டத்துக்கு சத்தியமா உளுந்தூர் பேட்டை சண்முகமுமோ DB ராமச்சந்திரனோ யாருனு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.
ஆமா அது யாருன்னா கேக்குறீங்க? அவங்க தான் ஊரையே எழுப்பிட்டு இருக்க அந்த பாட்டை எழுதுனவங்க.
" டேய் மச்சான் மறுபடியும் பிரச்சினை ஆரம்பிச்சிருச்சாம்டா. ஊகான்ல ஊரடங்காம். "
அந்த பாட்டு சத்தத்துலயும் பதற வைக்க இந்த செய்திக்கு தான் பவர் இருக்கு. சரக் சரக்குனு திரும்பி பாத்த 3 பேரு பாத்திட்டான் டீ ஆத்திட்டு இருந்த கோபி பய. கொஞ்சம் டர் ஆயிட்டான்.
"அண்ணே அது பழைய பேப்பர்னே, போண்டா மடிக்க வைச்சிருந்தது. இந்தாங்க" என்று ஓரமாய் இருந்த புது நியூஸ் பேப்பர் எடுத்து நீட்டியவன் சாப்பிட்டு முதல்ல கிளம்புடாங்கிற மாதிரியே பாத்தான்.
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பான்னு அடுத்த நியூஸ் படிக்க ஆரம்பிச்சா ஒரு பக்கம் ரஸ்யாவும் உக்ரைனும் கிளப்புன புழுதி அடங்கிறதுக்குள்ள அடுத்த சங்கு ஊத்திட்டானுக. இசுரேல் பாலஸ்தின். வீட்டுக்குள்ள தான் கும்மு கும்முனு வைச்சு கும்முரனுங்கன்னா நாடு விட்டு நாடும் இதே பிரச்சினை தான் போல.