வியாழன், 12 பிப்ரவரி, 2026

Who Do You Love?

Was it the curves of the script that bent your heart? Or the rush of the feeling as the ink began to start?

When the Soul-vowel meets
the Body-consonant,
did the rhythm break into
three beats? Or four?

You wait at the edge of the line,
holding onto a lover's quarrel
just to complete the meter.

Then comes the question, my dear:
"Is your love for me... or for the language?"

What a question to ask.

You are the one
who made words a necessity.
You are the architect
of these infinite rhythms.

In the perfect alignment
of these joining sounds—
it was you who gave me
the dream to lose myself in.

If I have grown close to this tongue,
if I have found such joy in speech,
it is only because you led me there.

Don't you see?
It is you
I am loving through them.

The Valentine Question

Hang the questions high— the ones that the tyrants could never quite look in the eye.

After the pleas, the petitions,
and the prayers offered in the dark,
hope was "reconsidered."
But the sentence remained.
The ideology was buried anyway,
stuck in a head that didn't survive.

Now, someone digs up that dirt.
They take a story of rot—
of a man erased by the soil—
and polish it into a poem.

Commerce picks it up with cold hands.
A billion-dollar contract
is signed in the name of the dead.

So tell me, Valentines:
What exactly are we celebrating?
The thing we buried?
The aesthetic of a poem written
in a month where no birds sing?

Are we honoring the ink?
The tear-stained signature
at the bottom of a cell-block letter:
“From your Valentine.”

Or are we just celebrating
the reach of the empire?
Tell me, Valentines—
What is left to toast?

திங்கள், 9 பிப்ரவரி, 2026

எண்ணுங்கள் எண்ணங்கள்

ஓட்டத்தின் வேகம்
ஒரு பொழுதும்
உயர்த்தியதில்லை
செயல் திறனை

நிமிடத்தின் நிசப்தம்
நிகழ்த்திடுமே 
உன்னத உள்நிலை  
உயர்வு  நிலை 

நோட்டத்தில் சிந்தனை
சிதறுவதால் 
நோக்கத்தில் தடம்புரள்
நேர்ந்திடுதே

எழுதிட, படித்திட 
எழுந்திடுமே - புதிர்
முடிச்சுகள் அவிழ்க்கிற
விடைகளுமே  

பாரத்தை ஓரத்தில் 
இறக்கி வைத்தே 
நேரத்தை இன்புற 
ஓடவிட்டே 

நெஞ்சத்தில் சேர்த்திட 
நல்லவைகள் 
எண்ணத்தின் வலுவினை  
ஏற்றிடுமே 

ஆயிரம் வழியுண்டு 
வெல்வதற்கு எனில் 
அள்ளிட அத்தனை  
செய்வதுண்டோ?

செய்வது ஒன்றேனும் 
நன்று செய்ய 
சொன்னோதோர் 
அவ்வையின் பேரனன்றோ?
அதை மறந்திட 
பயணங்கள் பயனுமுண்டோ?

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

சொல்லுங்கள் வாலன்டைன்ஸ்

ஆணையிடுபவர்களின்
ஆணவத்தை
எதிர்கொள்ள முடியாத
கேள்விகளை தூக்கிலிடுங்கள் 


வேண்டுதல்கள்,
விண்ணப்பங்கள் பின்
பிரார்த்தனையில் நின்றபடி
பார்வையின் திசை திரும்பிய 

நம்பிக்கையின் மறுபரிசீலனையில்
இரத்து செய்யப்பட்ட
தண்டனைகளிலும்
தலை தப்பாது புதைந்த
சித்தாந்தை
எடுத்த யாரோ ஒருவன்
புதைத்து, மக்கி,
தடம் தெரியாத கதையை
கவிதையாக்குகிறான் 


வணிகம் கையிலெடுத்து
பில்லியன் டாலர்
ஒப்பந்தமிடுகிறது 


எதைக் கொண்டாடுகிறோம்?
புதைக்கப் பட்டதையா?

பறவைகள் கூடாத
மாதத்தில்
கவி வடித்த
அழகியலயா?


“From your Valentine”
கடித முடிவின்
கண்ணீர் நனைந்த
கையெழுத்தையா?


விரிந்து பரவும்
வியாபாரத்தையா?


சொல்லுங்கள் வாலன்டைன்ஸ்
எதைக் கொண்டாடுவது?

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

யாரை காதலிக்கிறாய்?

வளைவுகள் நெளிவுகள்
வளைத்தவனவா?
எழுதிடும் உணர்வினில் 
எழுந்தனவா? 


உயிரதும் மெய்யுடன் 
இணைகையிலே 
மூவசை நாலசை 
இசைத்தனவா? 

ஓரசை நிறைத்திட 
ஓரத்திலே - நீ  
ஊடலை கைப்பிடி 
காத்திருந்து...

"உனக்கு காதல் என் மேலா  
தமிழ் மேலா?"

என்ன கேள்வியடி 
கண்ணே?

சொற்களின் அவசியம் 
செய்தவள் நீ 
அளவில்லா சந்தங்கள் 
அமைத்ததும் நீ 

இணைந்திடும் சொற்களின் 
சீரமைப்பில் - நான் 
சொக்கிட கற்பனை 
தந்தவள் நீ 

இத்தனை இன்பங்கள் 
உள்ளதென மொழியிடம் 
நெருங்கிட செய்ததும் நீ   

நான்
உன்னையுமல்லவா
காதலிக்கிறேன்!  

காதல் மவுசு

உனக்கொரு பரிசு
எனக்கொரு பரிசு
கொடுத்து அனுப்பி
பிறந்தது மனசு 


உலகமே மறுபடி
மாறிய தினுசு
எப்படி சொல்ல
திணறுற வயசு 


அப்பா அம்மா
காதல் மவுசு
தெரிஞ்சதனால
வந்த பவுசு


நினைச்சுட்டு தவிக்கிற
காதல் பழசு
நினைச்சத தெளிவா
பேசுற படிக்கு
தெளிவா வளந்த
தலைமுறை புதுசு 


ஆதாம் ஏவால்
குழப்பத்தை துரத்து
கடிச்ச ஆப்பிளு
பிடிச்சத விடுத்து
பேசுவோம் பேசுவோம்
பலப் பல கருத்து 


உனக்கொரு பரிசு
எனக்கொரு பரிசு
கொடுத்து அனுப்பின
இயற்கையும் எனக்கு
அனுப்பிய கவிதை
பகிர்கிறேன் உனக்கு 


நுகர்ந்திட விலையில்லா
மூச்சு காற்று
அனுப்பிய அன்பிலே
நிறைஞ்சு கிடக்கு 


முத்தத்தின் ஒத்தடம்
எடுத்து நிரப்பு
இறுக்கி பரவும்
காற்றிடம் அனுப்பு


நினைவுகள் நிரப்பி
தருபவள் இருக்க 
வேறு என்ன
வேண்டி கிடக்கு?

வியாழன், 29 ஜனவரி, 2026

உந்து சக்தி


கனியன் பூங்குன்றனார் வழியில்

நாம் செல்வதால்

கடந்தும் நாடு பல

மிளிரும் தமிழின் ஒளி.


தாயுமானவரின் எண்ணம்

சுமந்தபடி

இயங்கும் செயல்கள் வழி

உலகே உயர்வு பெறும்.


தானாய் இயக்கமில்லை

என்னை செலுத்துகிற

உந்து சக்தியிலே

அணுக்கள் தந்தவர்கள்!


தாத்தன், ஓட்டனென

ஓடித் தாண்டி பல

பரன் பரை தந்ததடா 

பண்பவை அத்தனையும்!


நண்பன், சொந்தமென

தெரிந்தோர் மட்டுமில்லை

ஆசான் தந்ததென்பேன்

செய்யும் சிறப்பனைத்தும்.