அன்பை ஒரு சொல்லென
சுருக்குவதை
ஏற்க முடிவதில்லை
எல்லா சப்தங்களின்
ஆணிவேரெனலாமா?
அளாவளாவன உரையாடல்களில்
மட்டுமில்லை
உரக்க சப்திக்கிற
கோபங்களிலும் அன்பே
ஆதாரமாயிருக்கிறது
சில வேதனைகளில்,
தொலைதூர ஏக்கங்களில்,
எட்டமுடியா உயரங்களில்
எல்லாமுமாய் பற்றி
படர்ந்திருக்கிறது அன்பு
சிலரால் முடிவுரை வரை
ஒத்தி வைக்கப்படுகிறது
என்பதை எப்போதும்
ஏற்றுக்கொள்ளவே முடியாத
பேரன்புடன் தான் யாவரும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக