செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

அன்புடன் நான்



உனக்கும் எனக்கும் 

இடைவெளி இருக்கும் 

சொன்னதை ஏற்க 

உள்வெளி மறுக்கும் 


கோணல் மாணல் 

ஒவ்வொரு முறையும் 

ஒத்துப்போகா நேரம் 

இழுக்கும் 


சிலமுறை நீயும் 

பலமுறை நானும் 

விட்டுக்கொடுத்தே 

முடிவுகள் முளைக்கும் 


பலமுறை நானென

சொன்னது இழுத்து 

மறுபடி ஒரு புது

போர்க்களம் பிறக்கும் 


ஒவ்வொரு முறை நாம் 

வாதிடும் போதும் 

உள்ளே இருக்கும் 

அன்பே செயிக்கும் 


உன்னுடன் நான் 

என்னுடன் நீ 

எவரெவருடனோ

உள்ளம் பேசி என்றும்…

அன்புடன் நாம்.

கருத்துகள் இல்லை: