வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

சொக்கப்பனை


பழுவின்
அழுத்தத்தில்
கட்டைவிரல் சத்திழந்த
மௌனம் 

பரவலாய்
ஏற்றுக்கொள்ளப்படுகிற
கருத்துக்காக
கழுத்தளவு நீரில்
குரல்வளை நெரித்த
பெருந்தவம்

ஆங்காங்கே
யாரோ திணித்த
கந்தகத்தின் திரியேற்றி
சுருசுருவென
பொறி சிதற…
எப்போது வெடிக்குமோ?

எதிர்பாரா நிமிடங்களில்
வெடிப்பதற்காய்
காத்துக்கிடந்து,
தவித்திருந்த நேரத்தில்

துளி விட்டு போகிற
மழையில்
திரியிழந்து போய்
சொக்கப்பனைக்கு
சேகரிக்கப்படுகின்றன 
சிந்தனைகள்

கருத்துகள் இல்லை: